பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பதுதான் பொருளே தவிர, அந்த மெய், வாய், கண், மூக்கு, செவிகளை அழித்து விடுவது அல்ல. சிலபேர் சிலவற்றைக் கேட்பதே இல்லை. ஆனால், சில சந்தர்ப்பத்திலே இவர்கள் சொல்வதையும் அவர்கள் காதுகள் கேட்பதும் இல்லை. இன்றைக்கு இருக்கிற விநோதமான போக்கு-நாம் ஊரெல்லாம் கட்டியாள முயன்றாலும், நம்முடைய மெய், வாய், கண், மூக்கு, செவிகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா என்பதே புரியவில்லை. பலருக்கு அவர்களுடைய கட்டுப்பாட்டின் மீதே இல்லை. ‘ஏனப்பா! திரைப்படத்திற்குப் போனாய்? என்று கேட்டால் அவன் சொல்லுகிறான். நான் போவதாகப் போகவில்லை. எனக்கு எண்ணமும் இல்லை, சுவரொட்டியைப் பார்த்தேன். போய்விட்டேன்’ என்று சொல்லுகிறான். அப்படி என்றால், கண் இவனை இழுத்துக் கொண்டு போகிறதே தவிர, கண்ணுக்கு ஆணையிடுகிற அளவுக்கு இவனுடைய தரம் உயரவில்லை. பார்க்காததைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று சொன்னால், விழித்த கண்ணோடு இருந்தால் கூடப் பார்க்காமல் இருக்க வேண்டும், கண்களைப் பார்த்தால் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனய்யா, பார்த்தாயா? என்றால் ‘நான் பார்க்கவில்லையே!’ என்னுமளவு கட்டுப்பாடு வேண்டும். விழித்துக் கொண்டிருந்தாயே என்று கேட்டால், நான் பார்க்காததைப் பார்க்குமாறு என் அறிவுப்புலன் கண்ணோடு ஒத்துழைக்காது என்று சொல்ல வேண்டும். அதேபோல், நெருக்கமாக இரண்டு பேர் உட்கார்ந்திருப்பார்கள். பக்கத்தில் ஒருவர் பேசிக்கொண்டே இருப்பார். அடுத்து அமர்ந்துள்ள நான் கேட்காமலே இருக்க வேண்டும். ஒரு நூறு அடி இல்லை. இருபதடி இல்லை, ஐந்தடிக்கு உள்ளேதான், பேசுகிற ஒலி செவிப்புலனுக்கு வருகிற எல்லைக்குள்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் நினைத்தால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்காமல் இருக்க முடியும். என்னுடைய அறிவுப்