உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

339


இருந்தாலும், உன்னுடைய ஆன்ம வலிமை சரியாக இருக்குமானால் நீ வலிமையும் ஆற்றம் உடையவனாக இருப்பாயானால் உன்னுடைய பகைவனும்கூட உனக்கு ஒன்றும் தீங்குசெய்ய முடியாது. வெளியே பூத பௌதிக உலகத்தில் பனி இருந்தாலும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்குமானால், வெளியே இருக்கின்ற பனி, அவனுக்கு மூக்குச் சளியை உண்டாக்கி விடாது. இவன் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், வெளியே பனி என்று போர்த்துக் கொள்ளுவான். இவன் எங்கே போனாலும், உடலைத் தெம்பும் திராணியுமாக வைத்துக் கொண்டிருந்தால், குளிர் தேசத்திலே கூட, இவன் கம்பளியில்லாமல் வாழ முடியும். அது உடலை வைத்துக் கொண்டிருப்பதைப் பொறுத்தது. இப்பொழுது கொஞ்ச நாளாக உடலைப் பேணுதல் என்பது அவ்வளவு தேவையற்றதாக இருக்கிறது. ‘இது ஒரு கட்டைதானே, எங்கேயோ போகப் போகிறது’ என்றெல்லாம் சொல்லி இழிவுபடுத்துகிறார்கள். நம்முடைய திருமூலர் போன்ற ஆசிரியர்கள் ‘உடம்மை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்’ என்று சொன்னார்கள். உடலைக் கருவியாகக் கொண்டுதான் ஆன்மா, ஞானம் பெறுகிறது. எழுதுவதற்கும், படிப்பதற்கும், நூல்புத்தகம் தேவைப்படுவதைப் போல, நம்முடைய ஆன்மா ஞானத்தைப் பெறுவதற்கு நம்முடைய உடற்கருவி இன்றியமையாத தேவை. எனவே, துன்பத்தை வரவழைத்துக் கொள்ளக் வடாது. அதற்கும் மேலாக யானை தன்னைக் கட்டுகிற சங்கிலியை, தன்னுடைய மாவுத்தனிடத்தில் தானே எடுத்துக் கொடுக்கும். கட்டு என்று எடுத்துக் கொடுக்கும். அதேபோல, சில மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே சில கட்டுக்களைப் போட்டுக் கொள்ளுவார்கள். காரணம், அவர்களுக்கு விரிந்த உலகத்தில் நடக்கப் பழக்கமில்லை. விருப்பமில்லை. விரிந்த உலகத்தினோடு அவர்கள் பழக முயற்சி செய்ய வேண்டும். நிறையப் பேருக்கு, நிறையப் பெருமை ‘பக்கத்து வீட்டில் யார்