பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

377


எது உடன்பாடில்லை? என்பதை எனக்குப் புரியும்படியாகச் சொன்னால், என்னுடைய அறிவிலே தெளிவூட்டினால், நான் யாருடைய கருத்தையும் ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன் என்று நான் சொல்வதுண்டு. எனவேதான், கருத்து வேற்றுமையாளர் களிடத்திலே கூட எனக்கு நட்பு, உறவு, இருக்கிறது. நான் என்னுடைய கருத்தை எங்கேயும் தெளிவாக்க முடியும் என்று நம்புகிறேன். எனக்குச் சில பிடிவாதமான மரபுகள் இருக்கின்றன; நடைமுறைகள் இருக்கின்றன; இந்தப் பிடிப்புகளிலிருந்து யாரும் என்னை எளிதாக அசைக்க முடியாது என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக இருக்கின்றது.

சமயம், சமுதாயம் என்ற இரு சொல்லைப் போட்டார் பெருமாள். தமிழ் என்ற ஒரு சொல்லைப் போட்டார். இந்த இரண்டுக்கும் நான் இவ்வளவு விளக்கம் சொல்ல வேண்டிய ஒரு நிலையை உருவாக்கி விட்டார். சமயமும், சமுதாயமும் பிரிக்க முடியாதவைகள், மீண்டும் நான் தமிழ்நாட்டில் இருக்கின்ற அனுபவத்தை வைத்தும், கடல் கடந்த நாடுகளில் நமது சமுதாயம் இருக்கின்ற அனுபவத்தை வைத்தும், நான் தெளிவாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். மீண்டும் கோயில்களை மையமாக வைத்து நம்முடைய குடிமக்களை இணையுங்கள்! கோயில்களைச் சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கை முறைகளை உண்டாக்குங்கள்! கோயில்களைச் சார்ந்து ஒரு சமூக மேம்பாட்டு நிதியை உண்டாக்குங்கள். உங்கள் சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களுக்கு உதவ, அந்த நிதியைப் பயன்படுத்துங்கள்! நம்முடைய கோயில்தான் இன்றைக்கும் வழிபடுவோர் பட்டியல் இல்லாத ஒரு கோயிலாக இருக்கிறது. இன்றைக்குச் சில சமயங்களில் தமிழ்நாட்டில் மதமாற்றப் பிரச்சனைகள் வருகின்ற பொழுது, நாம் போகிற பொழுது, நம்மை வெட்கித் தலைகுனியச் செய்யும் நிலையாக ‘அவன்’ யாருக்குச் சொந்தக்காரன் என்று பட்டியல் கூட இல்லாமல் இருக்கிறது. அவன் இந்தக்