பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நம்மைக் கிட்டுவதில்லை. ‘முள் நகராத மணிப்பொறிபோலச் சமயச் சடங்குகள் நடைபெறுகின்றன. பெண்டுலம் ஆடினாலன்றோ முள் நகரும். நெஞ்சைத் தொட்டாலன்றோ சமயச் சடங்குகளால் பலன் விளையும்.’ ஆலயமணிகள் நெஞ்சை அசைத்து விடவேண்டும். சோற்றால் செங்குருதியை ஆக்குவதுபோலக் கோயில் சடங்குகளால் இளைஞர் உள்ளங்களை அசைத்து விடவேண்டும். பொருளாதார மேடுபள்ளங்கள் சமயத்தை வெறுக்கச் செய்கின்றன. சமயம் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு ஆலயங்களிலே சிறைப்பட்டுக் கிடக்கின்றது. பொருள்வளங் கொழிக்கும் நாடுகள் புண்ணிய பூமிகளா? அங்குப் பிறந்திருப்போர் அத்துணை பேரும் புண்ணியவான்களா? அங்குள்ள மக்கள் மற்றவர்களின் அல்லலைப் போக்கிப் பொருளாதாரத்தைச் சமப்படுத் தலைக் கண்ணாரக் காண்கின்றோம்.

சட்டம் புறத்தே நடைமுறையைக் சீர்ப்படுத்த உதவுமேயன்றி மனத்தை மாற்றாது. சட்டத்தால் மனத்தை மாற்ற இயலாது. நீதியாலேதான் மனமாற்றத்தைச் செய்யமுடியும். சமய வாழ்வு பெற்று, இல்லார்க்கு இரங்கித் தொண்டு புரிந்து வாழ்ந்தால் இம்மையே சோறும் கூறையும் பெறலாம். கோயிலிலே அன்பின் அடிப்படையில் சடங்குகள் நடந்து உள்ளங்களைத் தொடவேண்டும். ஆண்டவனின் திருக்கோலக் காட்சியைக்கண்டு கசிந்து கண்ணீர் மல்கவேண்டும். இவ்வாறு ஆலயங்களில்லாவிடில் அவற்றை விட்டு, உள்ளம் கவரும் கடலையும் - மலையையும் கைதொழுவோம், “மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்” என அப்பரடிகள் தேவாரம் இதற்கு வழி வகுத்துத் தருகிறது.

எறும்பு, ஈ, யானை, எந்த ஆகமப்படி பூசை புரிந்தன. வழிபாடு நமக்காகவே நடைபெறுகின்றது. நாம் உய்தி பெறவே இறை வழிபாடு எழுந்தது. “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்” என மணிவாசகர் இதனை