பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

91


இறைவனை வழிபாடு செய்து கொண்டனர் என்பதுதான் உண்மை. ஆதலால் நமது கருத்தினை அடியிற்கண்டவாறு தொகுத்துத் தருகின்றோம்.

1. பன்னிரு திருமுறைகளுக்கும், மெய்கண்ட சாத்திரங்களுக்கும் மாறுபாடல்லாத சிவகாமச் செய்திகள் ஏற்புடையன.

2. சைவ நெறியில் விதிக்கப் பெற்றுள்ள தீக்கை முறைகள் எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் உரியன. சைவ தீக்கை பெற்றவர்கள் ஒரு குலமாக - சைவ குலமாக - ஆகின்றனர். இந்த அடிப்படையில் தான் ‘ஒன்றே குலம்’ என்று திருமந்திரம் பேசுகிறது.

3. தீக்கை பெற்றவர்கள் சிவாகமங்கள் ஓதவும், திருக்கோயிலில் அவர்கள் பெற்ற தீக்கைகளுக் கேற்றவாறு சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வகை வழிபாடுகள் செய்வதற்கும் உரிமை பெற்றவர்களாவர்.

4. முறையாகத் திக்கை முதலியன பெற்ற சிவாச்சாரியார்கள் திருக்கோயிலில் ஆன்மார்த்த பூசையும் பரார்த்த பூசையும் செய்வதற்கு உரிமையுடையவர்கள்

5. சைவ சமய தீக்கைகள் பெற்றவர்கள் அனைவரும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிற மூர்த்தியை ஆன்மார்த்தமாக வழிபாடு செய்து கொள்வதற்கு உரிமையுடையவர்கள்.

6. பரார்த்தம் என்பதற்கு “பிறர் பொருட்டு” என்பது பொருளாயினும் பிறருக்காகச் சிவாச்சாரியாரே செய்தல் என்பது ஒரோ வழி ஏற்புடையதே தவிர, முழுமையான தன்று. திருக்கோயிலின் காலப்