பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

137



இது மானிட வாழ்க்கையை ஜப்பானிய முறையில் அணுகி எழுதப்பெற்ற “New Concept of Man” என்னும் ஆங்கிலக் கவிதையின் தழுவலாகும்.

வாழ்க்கை உண்மையானது; பொருளுடையது. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது தமிழ்நெறி. வாழ்தல் வேறு; பிழைத்தல் வேறு; ஜீவித்தல் என்பது வேறு. உழைப்பதையே பிழைப்பாகக் கொண்டு வாழ்ந்து இன்பம் காண்பவர்கள் பெரியோர்கள்; சான்றோர்கள். பலர், பிழைப்பு நடத்துவதற்காக உழைக்கிறார்கள். அதாவது ஊதியத்தை எதிர்பார்த்தே வேலை செய்கிறார்கள். அதில் ஏற்படும் கூடுதல் - குறைவுகளுக்காக வேலை செய்வதையே கூட விட்டுவிடுகின்றனர். இஃது இழிசெயல், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” என்று வள்ளுவம் கூறும் “வாழ்வில் வெகு முக்கியமாய்க் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி, எங்ஙனம் வாழ்வது என்பதே!” என்றார் ஆல்பரி. தெய்வத்தைப் பரவி நிற்றல் தெய்வத்திற்குப் பெருமை சேர்ப்பதற்கன்று. நாமும் இறைமைக் குணங்களையும், இறைமையின் ஆற்றல்களையும் பெற்று வாழ்ந்திடுதல் வேண்டும் என்பதற்கேயாம். அப்பொழுது மானுட வாழ்க்கையே இறைமைநலம் மிக்க வாழ்க்கையாக உருமாற்றம் பெறுகிறது. எப்பொழுது? வாழ்வாங்கு வாழும் பொழுது!

சொல்லல் எளிது. ஆனால், வாழ்தல் அருமைப்பாடுடையது. வாழ்க்கையென்பது தயக்கங்கள், மயக்கங்கள், போராட்டங்கள் ஆகியவற்றால் ஆகின்ற ஒரு தொடர் வரலாறு. இந்தத் தொடர் வரலாற்றில் நாயகனாக - நாயகியாக இருப்பவர்கள் தொடர்ந்து வாழ்க்கையை முழுமைப்படுத்தும் நோக்கத்தோடு போர்க்குணம் மிக்கவராக வாழ்க்கையை இயக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். தியாக உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்யும் பணிகளால்தான் வாழ்க்கை முழுமை பெறுகிறது; ஆன்மா முழுமை பெறுகிறது. மலர்கள் மலர்கின்றன. அர்ப்பணிப்பு