பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

179


உயிரைச் சமுதாய வாழ்க்கையில் ஈடுபடுத்தித் தானே வளர்க்க வேண்டியிருக்கிறது! ஆதலால், வளர்ந்த அறிவை, உழைப்புத் திறனைக் காட்டி எந்தத் தனித்தகுதியும் இலாபமும் அடைய யாருக்கும் உரிமை இல்லை. “சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்பது அறிக அறிவறிந்த ஆள்வினை பெறாதார் உழைப்பை, உழைப்பின் படைப்பை யாரொருவர் எடுத்துக்கொண்டாலும் அது திருட்டே இலாபம் என்பதும் ஒருவகைத் திருட்டேயாம். ஆதலால், சமுதாயத்தின் வேறுபாடுகளை ஒருமையாக மாற்றுவதே சமயம். வேறுபாடுகள் தெரியாமல், அறிந்து கொள்ளாமல் வாழ்வதே சமய வாழ்க்கை.

—“மக்கள் சிந்தனை” —1-10-80


சமயத்தின் குறிக்கோள்
அன்பை வளர்ப்பதே!

ன்பு—வாழ்க்கையின் உயிர்நிலை. அன்பு வாழ்க்கையில் ஈட்டக்கூடிய துய்க்கக்கூடிய பொருள். உலகியல் வாழ்க்கையை உறவுகளால் செழிக்கச் செய்வது அன்பு. இறையிடம் இன்ப அன்பினையும், இறைவனின் உலகத்தையும் வழங்குவதும் அன்பேயாம்.

அன்புடையாராதல் அரிது. இன்று அன்பின் போலித் தோற்றங்களை அன்பு என்று நம்பி ஏமாறுகின்றனர் பலர். அன்புடையராய் வாழ்பவர்களுக்கே உயிர் உண்டு. அன்பில்லாதவர்கள் உண்டு, உடுத்துத் திரியும் பிணம் என்பார் திருவள்ளுவர்.

“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு” (குறள் 80)

அன்பு உயிரைச் சார்ந்த உணர்வு; ஒழுக்கம். அன்புக்கு வேறு புறமான குறிக்கோள் இல்லை. அன்புக்குக் குறிக்கோள்,