பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மழை போன்றது. ஆசை சுரண்டி ஏமாற்றி வாழ்வது. அன்பு உழைத்து வாழ்வது. ஆசை இரந்து உதவிகள் பெற்று வாழ்வது. அன்பு உழைத்து வாழ்வித்து வாழ்வது. ஆசை இகழ்வினைத் தருவது. அன்பு புகழினைத் தருவது. அன்புடையார் நெஞ்சத்தில் வேற்றுமை இல்லை. மருத்துவ நலம் கருதியும் வளர்ப்பு நிலைகள் கருதியும் பாகுபாடுகள் இருக்கலாம். இவை சிலருக்கு நிலையானவையல்ல. எல்லாரும் பெறக் கூடியனவே.

இந்த ஆற்றல்மிக்க அன்பு வாழும் முறையால், துய்க்கப்பெறும் நிலைகளால் வேறு வேறு பெயர் பெறினும் அன்பு அன்பேயாம்; கணவன் மனைவியிடை நிகழ்வது காதல். நண்பர்களிடையில் நிகழ்வது நட்பு. கடவுள் -உயிர்களிடையில் நிகழ்வது பக்தி. இவைகளின் பெயர்கள் வேறுவேறாயினும் துய்க்கும் நிலையால் வேறுபட்டனவே தவிர, ஒன்றில் ஒன்று உயர்ந்தவையுமல்ல; தாழ்ந்தவையுமல்ல. ஒன்றின் வாயிலாகப் பெறுவதைப் பிறிதொன்றின் வாயிலாகப் பெறலாம். ஏன் இறைவனையே கூட-இன்ப அன்பினைக் கூட பக்தியினால்தான் பெறவேண்டும் என்பதல்ல. முன் இரண்டு அன்பு நிலைகளில் செழித்து வளந்தாலே இறைவன் தேடி வந்தருள்வான். ஆனால் அன்புடையராதல் என்பது சொல்லுதற்கு எளிது. வாழ்தல் அருமை. அருமையுடையதெனின் முடியாததா? இல்லை. மனம் வைத்து முயன்றால் எளிது.

கணவன் மனைவியாக வாழ்தல் துாய வாழ்க்கை பெண்மையைப் பழித்தலும் மனையறத்தை இகழ்தலும் தமிழ் வழக்கமல்ல. “துறவியரும் தொழும் பரவை” என்பார் சேக்கிழார். சுந்தரர் பரவையாரிடத்தில் வாழ்ந்த இன்ப வாழ்க்கையை, யோக வாழ்க்கையை என்று சிறப்பித்துச் சேக்கிழார்,

“தென்னாவ லூர்மன்னன்
தேவர்பிரான் திருவருளால்