பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

199



தாழ்த்தப்பட்டவர்கள் முஸ்லிம்களாக மாறி விடுவதால், காவலர்களின் கொடுமை நீங்கிவிடுமா? அல்லது உரிமைகள் தாம் வந்துவிடப் போகின்றனவா? ஒருபொழுதும் இல்லை. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதைப்போல எல்லாச் சமயங்களிலும் எல்லா இனங்களிலும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆதிக்கப் போட்டிகள் இருக்கத்தான் செய்கின்றன. மனிதருக்குள்ளே கருத்துரிமைகள் சனநாயக உரிமைகள் ஆகியவற்றை நமக்கு அண்டையிலிருக்கிற முஸ்லிம் நாடாகிய பாகிஸ்தானில்கூடப் பார்க்க முடியவில்லையே! அந்த நாட்டின் பிரதமாரக்த் திகழ்ந்த ஒருவரைக் கூட தூக்கில் தூக்குகிறார்கள்! இவற்றையெல்லாம் நாம் சிந்திக்கவேண்டாமா? “சொர்க்கத்தில் அடிமையாய் வாழ்வதைவிட நரகத்தில் சுதந்தரமாய் வாழ விரும்புகிறேன்” என்னும் வாக்கு நினைத்தற்குரியது.

இந்தக் கலவரங்களின் பொழுது தாழ்த்தப்பட்டவர்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவாக- பாதுகாப்பாக இருந்தார்களா? அல்லது தாக்கும்பொழுது தாக்கியவர்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்தார்களா? இரண்டும் இல்லை. ஆதலால், ஏதோ ஒரு கோபத்தை மனத்தில் வைத்துக் கொண்டு மதம் மாறும் முடிவை விரைந்து எடுப்பது இந்து அரிசன சகோதரர்களுக்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல.

மேலும் இந்து அரிசனச் சகோதரர்கள் தாம் பெற்றுவரும் அரசுச் சலுகைகளை இழக்க நேரிடுவதன் மூலம் அவர்களின் பிற்கால வாழ்வு பாதிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும், அடுத்து, இந்த மதமாற்றத்தைக் குறித்து மற்றவர்கள் குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அரசினர் என்ன செய்யவேண்டும் ? முதலாவதாக ஆத்திர அவசரங்களில் மதம் மாறிச் செல்லும் உண்ர்ச்சிகளுக்கு அளவு கடந்த முக்கியத்துவத்தைக் கொடுத்து அதைக் கவனத்திற்குரியதாக்கி அஃது ஓர்