பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

329


ஆதரவு கிடைக்காது. செல்வச் சீமான்களின் ஆதரவு கிடைக்காது. இவர்கள் சமரசத்திற்கு, சமதர்மத்திற்கு உடன்படாதவர்கள். இங்ஙனம் உடன்படாதவர்கள் எண்ணிக்கையில் சிலரே. ஆனாலும் வலிமையான முகாம். நம்முடைய கொள்கைகளை இதயத்தில் ஏந்தித் துணை நிற்க வேண்டியவர்கள், சாதாரணமானவர்கள், கிராமங்களில் வாழ்பவர்கள். அவர்களைத் தேடுங்கள் அவர்களிடத்தில் மொழி உணர்ச்சியைத் துண்டுங்கள். இனப்பற்றை வளருங்கள். சமய வாழ்க்கையை மலரச் செய்யுங்கள்.