பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோயில் வழங்கியது. திருவாவடுதுறைத் திருக்கோயிலில் இலக்கணம் கற்றுத் தரும் கல்விச் சாலை இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. திருவாமாத்துணர்த் திருக்கோயிலில் திருமுறை பயிற்றுவிக்கும் கல்விச்சாலை இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. திருக்கோயில்களில் பட்டி மண்டபங்கள் நிகழ்ந்துள்ளன. ஆதலால், திருக்கோயில்கள் கடவுட் கோயில்களாக மட்டுமின்றிக் கல்வி கற்பிக்கும் அமைப்புகளாகவும் விளங்கின என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

கலைக்கூடம்

வாழ்க்கை, சோற்றினால் மட்டும் ஆவதன்று. ஆன்மாவிற்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை; அழகுணர்வு தேவை. திருக்கோயில் ஒரு சிறந்த கலைபயில்கூடம், திருக்கோயில் சிற்பக் கலையின் உறைவிடமாக விளங்குவது. மதுரை, கிருஷ்ணாபுரம், திருப்பெருந்துறை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம், பேரூர், காஞ்சி, மாமல்லபுரம், தஞ்சை முதலிய ஊர்களில் உள்ள திருக்கோயிற் சிற்பங்கள் சிறந்தவை. கல்லில் எவ்வளவு அருமையான வேலைப்பாடுகள் செய்துள்ளர்கள்! அதுவும் கருங்கல்லில் சிற்ப உருவங்கள் அமைத்தல் மிகவும் கடினமானது. அதுபோலவே பல்வேறு வண்ணங்களால் தீட்டப் பெற்ற ஓவியங்களும் திருக்கோயில்களை அணி செய்துள்ளன. ஆடற்கலையும் பாடற்கலையும் இசைக்கலையும் வளர்ந்ததும் வளர்வதும் திருக்கோயிலைச் சார்ந்துதான். நாடகக்கலையும் கூட திருக்கோயிலைச் சார்ந்துதான் வளர்ந்தது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவில் நிறை நிலா நாளன்று முறையாக இராசராசேசுவர நாகடம் நடந்ததுண்டு. எண்ணற்ற மக்கள் கண்டு கேட்டு மகிழ்ந்தனர். திருக்கோயிலைச் சார்ந்து வளர்ந்த பண்ணிசை, பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகுதியும்