பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் சோலை

377


சமுதாயம் வாழும். திருவருளும் துணை செய்யப் பிரார்த்தனை !


மனிதவள மேம்பாட்டில் ஆன்மிகம்

இந்தப் பரந்த உலகத்தின் உயிர்ப்பு மாந்தரிடத்திலேயே இருக்கிறது. இந்த உலகத்தை, உலகத்தின் இயக்கத்தை, மாற்றத்தை, வளர்ச்சியை இயக்கும் உந்து சக்தி, மானுட சக்தியே! மானுடம் அளப்பரிய ஆற்றல் மிக்க தோற்றம். இன்றைய பிரதமர் கல்வி அமைச்சராக இருந்தபொழுது, கல்வி அமைச்சு என்பதை “மனிதவள அமைச்சு” என்று மாற்றினார். ஆம்! இன்றுள்ள கல்விமுறை மனிதனின் புலன்களில், பொறிகளில் ஆற்றலை வளர்த்து ஆன்மாவை வளர்ப்பதாக இல்லை. மாறாகப் பிழைப்புத் தேடி அலையும் பிராணி ஆகிவிட்டது. அறிவைத் தேடல், கடின உழைப்பு, தியாகம் ஆகியனவற்றை வழங்கக்கூடியதாக இன்றைய கல்வி இல்லை. அதனால், சிறந்த அறிஞராகிய நமது பிரதமர் நாட்டின் நிலைமையறிந்து நாட்டிற்கு உடனடித் தேவையான மனிதவளத்தை வளர்க்க எண்ணினார்; முயன்றார்! என்ன நடந்திருக்கிறது என்பதை வரலாறு கூறவேண்டும்.

மனிதவளம்

“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி”-என்று போற்றியவகையில் இம்மானுடப் பிறப்பைப் போற்றி வளர்த்து, வெற்றிகளைப் பெறவேண்டும். குறித்த ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கையை நடத்துவதுதான் சிறப்பு. தேவைகளை அடைவது குறிக்கோள் ஆகாது. தேவைகளைக் கடந்தது குறிகோள். மனிதவளங்கள் எவை? அவை இயற்கையில் அமைந்துள்ளனவா? அல்லது மனிதன் தேடவேண்டுமா? சிந்திக்கும் திறன், அறிவு, ஆற்றல், ஆன்மாவின் தரப்பாடு ஆகியன மனிதவளமாம்! இவற்றில் எவையும் இயற்கையாக அமைந்தவையல்ல. மனிதன்