பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆன்மிகமும் அறிவியலும்

453


கிறான். அது ஒருபெருக்கி என்றே சொல்லப் பெறுகிறது. அதுபோல் கல், செம்பு முதலியவற்றை எடுத்துத் திருவுருவங்கள் செய்து, இறைவனை எழுந்தருளச் செய்து கடவுட்பெயர் சூட்டுகின்றனர். நாம் அனைவரும் கடவுள் என்று கூறுவதே மரபு முறையும்கூட! ஒலிபெருக்கி மூலம் கேட்க முடிகிறதே என்பர். ஒலிபெருக்கியாலும் காதுகேளாதவர்களைக் கேட்பிக்க முடியாது. கடவுட்காட்சியும் அனுபவ இதயம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். மனிதனுடைய இருதயம் பேச இயலாததாக இருந்தால் கடவுள் காதுகேளாதவர் ஆகியன போலத்தானே!

திருக்குறள் முழுவதிலும் அகரமுதல எழுத்துக்கள் உள்ளன. அதனால் திருக்குறளை அரிச்சுவடி என்று யார்தான் கூறுவர்? குழந்தைகளின் பார்வையில் திருக்குறளில் அகரமுதல எழுத்துக்கள்தான் தெரியும். மாணவர்கள் பார்வையில் ‘அகர முதல’ என்ற வாசகம் தெரியும். பேராசிரியர்களுக்குத் திருக்குறள் இலக்கியம். சமய அறிஞர் களுக்குத் திருக்குறள் அறநூல். ஒரே திருக்குறள் வயது, அனுபவங்களுக்கு ஏற்ப, அனுவிக்கப் பெறுவதைப் போலத் தான் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள கடவுள் திருமேனிகளையும் முறையே கல், உருவம், சிற்பம், கடவுள் என்றெல்லாம் அனுவ முதிர்ச்சிக்கு ஏற்ப, அனுபவிக்கிறார்கள்.

திருவுருவங்களைக் கருங்கல், செம்பு இவைகளால் மட்டுமே அமைந்தனர். கல், ஒரு ஆற்றலை வாங்கிக் கொள்ளும், எளிதில் விடாது என்பதால் கருங்கல்லில் இறைவனை எழுந்தருளச் செய்தனர். ஆற்றல் கடத்திகளில் செம்பு முக்கியமானது. விரைந்தும் செய்யக்கூடியது. கடவுளின் ஆற்றலை வாங்கிவைத்துக் கொண்டு நமக்குத் தரும் ஆற்றல் செம்பு உலோகத்திற்கு உண்டு என்பதால் செப்புத் திருமேனிகள் அமைந்தனர். திருவுருவ அமைப்பில் அறிவியல் அணுகுமுறை அமைந்திருப்பதை எண்ணி மகிழ்க!

கடவுளை எங்கும் தொழலாம். எதிலும் தொழலாம்! எப்படியும் தொழலாம்! அப்படியாயின் ஏன் திருக்கோயில்?