பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாணமும் அதனைத் தாங்கி நிற்கும் ஆற்றலாக ஆவுடையும் என்று கருதி வழிபாடு செய்யப் பெற்றது. தொன்மைக்கால மக்கள் தீயினையே வழிபட்டு வந்திருக்கின்றனர். “சோதியே, சுடரே! சூழொளி விளக்கே!” என்று திருவாசகம் கூறும். கடவுட் காட்சியில் முதற்காட்சி சோதிதான்! எரிகின்ற எந்தப் பெருஞ்சோதி நெருப்பும் அடிப்பகுதி அகன்றும், நுனிப்பகுதி குறுகியும் இருக்கும். இது இயற்கை நியதி. இங்ஙனம் பாணம் குறுகி எழும் சோதியாகவும் ஆவுடை அச்சோதியின் அடிப்பாகமாகவும் கண்டு வழிபாடு செய்யப் பெற்றது. அறிவியல் உலகில், பொருளையும் ஆற்றலையும் - ஒன்றாகக் கிடந்து பொருளின் ஆற்றலையும் பிரித்துத் தனித்தனியே பெயர் சூட்டி அழைக்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. சிவம் பொருள்; அப்பொருளின் ஆற்றல் சக்தி. சக்தியாய், சிவமாய் ஒருங்கிணைந்து நின்றிடும் திருமேனி சிவலிங்கத் திருமேனி. இங்ஙனம் வாழ்வோடு பொருந்திய கலை ஞானத்தின் மறு பதிப்புக்களே திருக்கோயில் திருவுருவங்கள்.

அடுத்துப் பொருளையும், பொருளின் ஆற்றலையும் பிரித்து வழங்குமாறு போலத் தனித்தனியே பிரித்துச் செய்யும் வழிபாட்டு முறையால்தான் அம்மையப்பன் வழிபாட்டு முறை தனித்தனியே பிரிந்தது. பொருள், பொருளாற்றல் இவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் பயனே இன்பம். அதுவே முருகு எனத் தோன்றி நின்து. திருக்கோயில் திருவுருவங்கள் எல்லாமே வாழ்க்கையின் - அனுபவத்தின் வெளிப்பாடேயாம்.

வாழ்க்கையில் களிப்பும் மகிழ்ச்சியும் சிறக்க, திருவிழாக்கள்துணை செய்யும். திருவிழாக் காலத்தில் மக்கள் ஒன்று திரளுவர்; சமூக உறவுகள் வளரும் பாட்டும் கூத்தும் மேடைகள் தோறும் நிகழும். கடைசியாகத் திருத்தேர்த் திருவிழா நிகழும் பல டன் எடையுள்ள தேரைச் சில நூறு பேர் இழுப்பர். சமூக ஒருமைப்பாட்டுக்கு இஃதோர் அளவு