பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

97


வளர்ந்திருக்கிறது. உணவுப் பற்றாக்குறையிலிருந்து இந்தியாவை மீட்ட பெருமை கிராமப்புறத்து விவசாயிகளுக்கு உண்டு. இன்று நமது நாடு தன்னிறைவு பெற்ற நாடாக விளங்குகிறது. ஒரு நாட்டை உணவுத் துறையில் தன்னிறைவாக்கிய கிராமப்புறத்து விவசாயிகளின் வாழ்க்கை தன்னிறைவுடையதாக இல்லை. ஏன்? நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் பூரண வெற்றி பெறவில்லை. நிலப் பிரபுத்துவத்தின் இரும்புப் பிடி ஒருபுறமும் பிறிதொருபுறம் துண்டுபட்ட நிலங்களும் உள்ளன. விவசாயிகளிடம் வாழ்க்கைக்குக் கட்டுபடியாகாத நில அளவே கைவசம் உள்ளது. இத்தகையோரின் வேளாண்மை தன்னிறைவுடையதாக ஆகாது. நிலவுரிமைக்குப் பங்கமில்லாத வகையில் கூட்டுறவுச் சாகுபடி முறையைக் கிராமங்களில் அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் வேளாண்மையின் தரமும், உயரும்; உற்பத்தியும் பெருகும். அது மட்டுமன்று. பல கிராமங்களில் தேவைக்கு அதிகமானவர்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் சக்தியும் வேளாண்மைத் தொழில் நேரம் போக, மீதமுள்ள காலச் சக்தியும் வீணாகின்றன; வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் மக்களில் குறைந்தது 40 விழுக்காட்டு மக்களை இருபதாம் நூற்றாண்டுக்குள் வேறு தொழிலுக்கு மாற்ற வேண்டும். கூட்டுறவுப் பண்ணை முறையில் வேளாண்மையைச் செய்யவேண்டும்.

கால்நடை

வேளாண்மைத் தொழிலுக்கு இணையாக - துணையாக அமைவது கால்நடை வளர்ப்புத்துறையாகும். இந்தத் தொழில் பயனீட்டும் தொழிலாக இன்னும் கிராமங்களில் வளரவில்லை. கிராமப்புறங்களில் பால் மாடுகளின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர பாலின் உற்பத்தி அளவு கூடவில்லை. குறைந்த அளவாக 10 முதல் 15 லிட்டர் பால் கறக்கின்ற மாடு இருந்தால்தான் பால்மாடு வளர்த்தல்