பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

101



18. [1]கிராமப்புற வளர்ச்சிக்கான
தொழில் நுட்பம்

கிராமப்புற வளர்ச்சி பற்றிய சிந்தனை இன்று வேகமாக வளர்ந்து வரும் சிந்தனை; வரவேற்கத் தக்க சிந்தனை! ஆயினும், கிராமப்புற மக்கள் தங்களுடைய சுற்றுப் புறச் சூழ்நிலையை அறிந்து கொள்ளவும், அச்சூழ்நிலையைத் தங்கள் வாழ்க்கையோடு இணைத்துப் பயன்பெறவும் கற்றுக் கொள்ளவேண்டும்.

மாந்தர் தம் வாழ்க்கையின் அடித்தளம் நிலமே. நிலத்தின் வளம் காப்பாற்றப்படுதல் வேண்டும். நிலத்திற்கு அடுத்து மாந்தர்தம் வாழ்க்கை சார்ந்திருப்பது தாவரங்களையும் மரங்களையுமேயாம். மரங்களின்றி மண்ணுலக வாழ்வு அமையாது. இதுவே உண்மை. இந்த நிலத்தையும் தாவரங்களையும் மரங்களையும் தண்ணீரையும் பயன்படுத்தி விவசாயப் புரட்சி செய்யலாம். விவசாயத்தில் விளையும் பொருள்களைக் கொண்டு நுகர் பொருள்கள் பல செய்யலாம். கிராமப்புற வளர்ச்சி, விவசாய அடிப்படையிலான தொழில்களாலேயே ஏற்படமுடியும். அங்ஙனம் ஏற்பட்டால்தான் அந்தப் பொருளாதார வளர்ச்சி நிலையானதாகும். கிராமப்புற வளர்ச்சி என்பது மூன்று நிலைகளுடையது. இதில் இரண்டு அடிப்படை. ஒன்று விவசாயம், இரண்டு கால்நடை வளர்ப்பு, மூன்றாவது இவ்விரண்டின் அடிப்படையில் உருவாகும் தொழில்.

வடகொரியா, மிகச் சில ஆண்டுகளில் வளர்ந்து விட்டது! ஏன்? வடகொரியாவில் உழைக்காத மனிதன் இல்லை! விளையாத நிலமும் இல்லை! நமது நாட்டில் தரிசு நிலம் ஏராளம்! மரங்களை வளர்ப்பதில் அக்கறை காட்டுவ


கு.xiii.8.

  1. மதுரை வானொலி 21–6–93