பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழகு அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, முதல் தரமான உரம் தயாரிக்கப்படுகிறது. இன்று பெருவாரியாகப் பழக்கத்தில் உள்ள இரசாயன உரங்கள், உரங்களே அல்ல. அவை கிரியா ஊக்கிகளேயாம். உரங்களுக்கு பதில் மட்கிய தொழு உரங்களைப் பயன்படுத்தினால் நிலத்தின் தரமும் காப்பாற்றப்படும்; உற்பத்தியும் பெருகி வளரும். இரசாயன உரம் வாங்கும் செலவும் குறையும், கிராமமும் அழகாக இருக்கும்; நோயற்ற வாழ்வும் அமையும்.

கிராமங்களில் அடுத்த இடத்தைப் பெறுவது விவசாயம். கிராமத்தின் தேவைகளை நிறைவு செய்யும் தொழிலில் முதன்மையான இடத்தை வகிப்பதும் விவசாயமே. கிராமத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத்தக்கவாறு விவசாயத்திற்குரிய விளைபுலன்களை பகிர்தல் செய்யவேண்டும். மேதை குமரப்பா ஒரு கிராமம் சராசரி தன்னிறைவுடையதாக அமையவேண்டுமானால் அடியில் கண்டவைகள் அந்தக் கிராமத்தில் உற்பத்தியாக வேண்டும் என்கிறார்:

நவதான்யம், நெல், பருப்பு, சர்க்கரைக்கான கரும்பு, தேன், பனை கொட்டைவகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கள், கிழங்கு வகைகள், பழவகைகள் ஆகியன உணவுக்கும், பருத்தி உடைக்கும் உற்பத்தியாக வேண்டும்.

கிராம மக்கள்தொகை அடிப்படையில் இவைகளின் தேவையைக் கணக்கிட்டு கிராமத்தில் எந்தெந்த நிலத்தில் எவை எவை விளையும் என்று கண்டு தெளிந்துகொண்டு பன்முகப் பயிர்ச் சாகுபடியை கிராமத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் கிராமம் தன்னிறைவு உடையதாக விளங்கும். கிராமங்களில் பண்டமாற்று முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். பணத்திற்குப் பண்டம் விற்பனை முறை தவிர்க்கப்படுதல் வேண்டும். இவையனைத்தையும் திட்டமிட்டு உற்பத்தி செய்து கிராம மக்களுக்குச் சமவிகிதச்