பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யுடைய நல்வாழ்க்கையையும் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கி வைப்பது என்பது நமது தலைமுறையினருக்குக் காலம் தந்துள்ள கடமை. இந்தத் தலைமுறையினருக்கு வாய்த்துள்ள அறிவியல் சார்ந்த கடமை. இந்திய மக்களிடத்தில் சமயச் சார்பற்ற தன்மையையும் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பதுமேயாகும்.

காலம் தந்த இந்தக் கடமையை ஏற்க முன் வந்துள்ளது தமிழ்நாடு திருவருட் பேரவை. தமிழகம் தழுவிய திருவருட் பேரவை உறுப்பினர்கள் தஞ்சையில் சென்ற மாதம் 26, 27ஆம் தேதிகளில் கூடினர். இந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்தக் காலத்தில் வாய்த்துள்ள அறைகூவலை ஏற்று பணிசெய்ய உறுதி கொண்டனர். இதற்கு மனித நேயமிக்க பணியினை மேற்கொண்டு புனிதப்பயணம் தொடங்கியுள்ள திருவருட் பேரவை அணியினருக்குத் தலைமை ஏற்று அழைத்துச் செல்ல மக்கள் பேராயர் மதுரை ஆர்ச்பிஷப் மேதகு டாக்டர். எம். ஆரோக்கியசாமி தலைமை ஏற்றுள்ளார். இன்றைய வரலாறு தந்துள்ள பணியினைச் செய்து முடிப்பார் என்று நம்புகிறோம்; வாழ்த்துகின்றோம்.


28. [1]பழமையும் புதுமையும்

ன்று அறிவியலார் மின்னல் வேகத்தில் முன்னேறிச் செல்கிறார்கள். புதியன கண்டு-அதற்கு அளவுகடந்த வரவேற்பளிக்கின்றார்கள். பழைமையை வெறுக்கின்றார்கள். இன்றைய உலகம், புதுமையுமற்று-பழமையுமற்று இரண்டுங் கெட்ட நிலையிலே நிற்கிறது. மேலை நாட்டில் புதியன வளர்ந்து வருகின்றன. ஐன்ஸ்டீன் கருத்து பைபிளை விலக்கிச் செல்கின்றது. பைபிள் புதியனவற்றிற்கு மாறுபட்டபோதும் உயிர் வாழ்கின்றது; அதன் பழமை பாராட்டப்படுகின்றது.


  1. முத்து மொழிகள்