பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூடிய ஆன்மிக வாழ்க்கை! இந்த ஆன்மிக வாழ்க்கையும் சமூக வாழ்வுதான்! “ஒன்று பரம் பொருள்; நாம் அதன் மக்கள்; உலகின்பக் கேணி” என்பதறிக.

எங்கு ஏற்றத்தாழ்வு இல்லையோ, எங்கு பகை இல்லையோ, எங்கு எல்லோரும் எல்லாம் பெற்று இன்பத்துடன் வாழ்கிறார்களோ, எங்கு எல்லாரும் உறவினராகிக் கூடிக்களித்து வாழ்கிறார்களோ, எங்கு அறிவு சார்ந்த வாழ்வு இருக்கிறதோ, எங்கு இன்பம் பொங்கி வழிகிறதோ, அங்கு அறிவியல் வெற்றிபெறுகிறது; ஆன்மிகம் வாழ்கிறது; அறிவியலும் அருளியலும் பொதுளச் சமூகம் இயங்குகிறது!

2-11-88


32. [1]சிவகங்கைச் சிங்கங்கள்

மூவேந்தர் மறைவுக்குப் பிறகு, நல்லறங்கள் செய்வதில் திருக்கோயில்கள் பாதுகாப்பில் குறுநில மன்னர்கள் ஈடுபட்டனர். சிவகங்கை சமஸ்தான அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் பேரறங்கள் பல செய்துள்ளனர். அரசி வேலு நாச்சியாரின் அமைச்சராக இருந்த மருது சகோதரர்கள் வீரவரலாறு நிகழ்த்தியவர்கள். இந்திய மண்ணில் அந்நிய ஆதிக்கத்தை விரட்ட நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போர் வீரர்கள், சிவகங்கை அரச குடும்பத்தினரின் நல்லெண்ணத்தினாலும், மக்களின் பேரன்பாலும் வேலு நாச்சியாருக்குப் பிறகு, சின்ன மருதுவே, சிவகங்கை அரசனானான். இராம காதையில் இராம இலக்குமணரிடையே எப்படிச் சகோதர ஒற்றுமையிருந்ததோ, அதைப்போலவே மருது சகோதரர்கள் விளங்கினார்கள். ஏன்? இதிகாசத்தில் வரும் இராம இலக்குவ சகோதரர்களில் இராமனுக்குச் சிறப்பிடம் கொடுக்கப் பட்டி


  1. வானொலியில்...