பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



“ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு
தேடும் சிலம்பியோடு சிற்றெறும்பு-நீடுகின்ற
பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணிய தென்றால்பூசை
ஓம்புவதற்கு யார்தான் உவவாதார்?”

என்று வள்ளற் பெருமான் பாடுகிறார். நாம் அனைவரும் இந்த நியாயமான பாவேந்தனின் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாவேந்தன் அடுத்து முழங்குகின்றான். ஓடப்பரை ஒப்பப்பராக்க வேண்டும் என்கின்றான். எல்லோரும் எல்லாவற்றையும் பெற வேண்டும். இது பாவேந்தனின் இலட்சியக் கனவு. இந்தக் கனவை நனவாக்க நம்முடைய அரசும் முயற்சி செய்கிறது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பது நமது அரசின் நெறிமுறை, நம்முடைய அமைச்சர்கள் இறை வனைக் காண்கிறார்கள். ஆனால், காணும் முறை வேறு, காணும் இடம் வேறு, ஆனால் காணப்படுவது இறைவனையே என்பதை நாம் நல்லவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பது உயர்ந்த சமய நெறியே! நமது இறைவன். கூடத் திருக்கோயிலில் உண்ணாமலிருப்பது. உலகுயிர் அனைத்தும் உண்ணும் வரையில் தான் உண்ணக் கூடாது என்பதாலேயேயாகும். பாவேந்தனும் 'உலகுண்ண உண்!' என்றான். இந்த நாட்டு மக்கள் அனைவரும் வாழத் திட்டங்களைத் தந்த பாவேந்தனின் திட்டங்களைச் செயலாற்றி மகிழ்வோம்.


44. [1]புதைமணலில் சிக்கிய யானை!

மிழ்நாடு வரலாற்று பழைமை உடைய நாடு. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த


  1. சிந்தனைச் சோலை