பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாட்டு மக்களின் சிந்தனை ஊற்றை அடைத்து விட்டால், நாட்டிலே தேனாறும் பாலாறும் ஓடினாலும் பயனில்லை. நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளாகியும் தமிழ் பயிற்சி மொழியாகவில்லை என்பது வெட்கப்படத்தக்கதுதான். குழந்தைக்கு ஆண்டுவிழாக் கொண்டாடுவதிலும் பெயர் வைப்பதிலும் அக்கறை காட்டுகின்ற பெற்றோர்கள், தம்மக்களின் கல்விக் கொள்கையில் அக்கறை காட்டாமல் இருக்கின்ற பெற்றோரின் போக்கு கண்டனத்திற் குரியதாகும்.

மனிதனின் உரிமைக்கும் உணர்வுக்கும் மொழி ஊற்றுக்கால் போல, தாய்மொழி வாயிலாக இயல்பாக எண்ணுகிறோம் - இயல்பாகச் சிந்திக்கிறோம் - இயல்பாகவே பேசுகிறோம். அயல்மொழி வாயிலாக இயல்பான எண்ணம், இயல்பான சிந்தனை, இயல்பான பேச்சு இருக்க முடியாது. அயல் மொழிகளில் படிப்பது, போலிக்கால்களால் நடப்பது போன்றதுதான். சொந்த மொழியில் படிப்பது சொந்தக் காலில் நடப்பது போல. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அவர்களின் தாய் மொழியில் ஒன்றைச் சொல்லி ஆணையிட்டுப் பாருங்கள். அவர்களின் உள்ளுணர்வுகளையும் ஊக்கத்தையும் கவனியுங்கள்.

ஆட்சியின் பேரால், வைதிகத்தின் பேரால், மொழியின் பேரால் ஒவ்வொரு காலத்திலும் நாம் ஒவ்வொரு மொழியைச் சுமந்து வந்திருக்கிறோம். இன்று 'ஒருநாடு' 'ஒருமைப்பாடு' என்ற பெயரால் இந்தியைச் சுமந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆங்கிலேயன், அவனுடைய ஆட்சிச் சக்கரம் செவ்வனே உருள ஆட்சி செவ்வனே நடக்க நமக்கு 'குமாஸ்தா' வேலை செய்வதற்குரிய படிப்பைக் கொடுத்தான். நம்மவர்களும் வேலை பெறுவதற்காக ஆங்கிலத்தைப் படித்தார்கள். எனவேதான் இன்று அவர்கள் 'தமிழில்