பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

319


நிறுவனங்களில் இட ஒதுக்கீடும் தேர்வுக்குரிய மதிப்பெண்கள் பெறுவதில் சலுகையும் தொடர்ந்து வழங்கப் பெறுதல் வேண்டும்.

ஆண்டு ஒன்றுக்கு (ரூ.15000) ரூபாய் பதினையாயிரமும் அதற்கு மேலும் வருவாய் வருகிறவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக மாட்டார்கள். அது போலவே நிலவுடைமையில் 10 ஸ்டாண்டர்டு ஏக்கர் உடைமையாக உடையவர்களும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் அல்லர். (இதற்கு உடைமை அளவையே எடுத்துக் கொள்ளவும் - வருவாயைக் கணக்கிடுதல் அவசியமில்லை. அது போலவே வருமான வரி, விற்பனை வரி கட்டுகிறவர்களையும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் அல்லர் என்று கொள்ளவும். வருமானவரி விற்பனை வரியில் சிலர் ஏமாற்றலாம். சாதி அமைப்பு முறையால் வரும் தீமையை நோக்க, இது பரவாயில்லை எனலாம்.)

மேற்கண்ட மூன்றில் (2) (3) இரண்டிலும் பின் தங்கியிருப்போர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்; சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தும் மற்ற இரண்டு தகுதிகளில் ஒன்றை அவர்கள் பெற்றிருந்தால் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் என்றே கருதப்பெறுவர். (2) (3) இரண்டில் ஏதேனும் ஒன்றில் பின் தங்கியிருப்போர் பிற்படுத்தப்பட்டோர்.

இந்த அடிப்படையிலே முன்னேற்றத்திற்குரிய நிதி உதவிகள் படிப்பிற்குரிய இட ஒதுக்கீடுகள், வேலை வாய்ப்புக் குரிய இட ஒதுக்கீடுகள், அனைத்தும் செய்து அவரவர் மேம்பாட்டுக்குரிய உதவிகளைச் செய்து ஒத்த நிலைக்கு உயர்த்திக் கொண்டு வருமாறு இந்த மாநாடு அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.

மேலும் சாதிகளின் பெயரால் வணிக நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசுச்சார்புடைய நிறுவனங்கள் தோன்றாமலிருக்க வழிவகை காணுமாறு