பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



345

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


8.நீர்ப்பாசனம் தொடர்பாக ஆற்றுக்கால் பாசனச் செலவு, ஏரிப் பாசனச் செலவு போலக் கிணற்றுப் பாசனச் செலவையும் அரசே ஏற்கவேண்டும். (தனியார் கிணறுகளுக்கல்ல) சமுதாயக் கிணறுகளை ஆழ்துளைக் கிணறுகளாக அமைத்துத் தருதல். அவற்றைப் பராமரித்தல், இறைவைச் செலவு ஆகியவற்றை அரசே ஏற்று, விவசாயக் கூட்டுறவு சேவைச் சங்கத்திற்கும் தரவேண்டும். "Nabard' நிறுவனம் வேளாண்மை - கால்நடைத் துறைத் திட்டங்களுக்கு நிதி வழங்க இந்த விவசாயக் கூட்டுறவு சேவைச் சங்கங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


(குறிப்பு) விவசாயச் சேவைக் கூட்டுறவு சங்கங்கள் இச்செலவுகளை ஏற்றுக் கொண்டு தக்க வகையில் நிதி வசதி பெற்றவுடன் அரசு பொறுப்பேற்க வேண்டியதில்லை;

9. கிராமங்களின் ஆதாரங்களாகிய ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள் அனைத்தும் விவசாய சேவைக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக அமைப்பின்கீழ் வந்து, சேவைச் சங்கம், நீர்க் கமிட்டிகளை நியமித்து முறைப்படுத்தி நீர்ப்பாசனம் செய்துதர வேண்டும். தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இன்று கிராமங்களுக்குத் தண்ணீர் நிர்வாக மேலாண்மை தவிர்க்க இயலாதது மட்டுமன்று; அவசியமானதும்கூட

10. கிராமக் கழிவுகளைத் திரட்டிக் கலவை உரமாக்கும் பணியையும், கிராமப் பஞ்சாயத்துடனும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்துடனும், ஆடு வளர்ப்போர் சங்கத்துடனும் ஓர் உடன்படிக்கை அடிப்படையில் விவசாயக் கூட்டுறவு சங்கங்கள்