பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

417


நடந்தாலும் அவனுடைய நடைக்குக் கருத்திருக்கும்: பொருளிருக்கும் என்று சமூகம் நம்புகிறது. அதனால் மனிதனின் ஒழுக்கத்தையே நடையென்று கூறினர். ஆனால் நடைமுறை அப்படியில்லை. மனிதன், தளிர்கள் தளிர்த்துத் தழைக்கும் மரமென விளங்க வேண்டும். அதாவது பழைய வாழ்க்கையின் அனுபவம் என்று பழுப்பும். நேற்றைய வாழ்க்கையின் அனுபவம் என்று தழையும், இன்றையச் சிந்தனையென்ற புத்தறிவாகிய தளிரும் பொருந்தி விளங்க வேண்டும். அவனே மனிதன். சமுதாயம் செழிக்க அறியாமையைக் களைந் திடுவோம். வாழ்வில் புத்தொளி வீசும் புகழ் பூக்கும்.

விலங்கினங்கள் மேய்க்க மேய்வன. உண்பிக்க உண்பன. வேலைவாங்க வேலை செய்யும் இயல்பின. ஆனால் மனிதன் உண்பிக்க உண்பதில்லை. அவனே உண்கின்றான். மனிதன் தனக்குரிய உணவைத் தானே தேடிக்கொள்ள வேண்டும் என்பது இயற்கையின் நியதி, தனக்கு மட்டுமல்ல. தன்னைச் சார்ந்தோர்க்கும் தேடவேண்டும். அவன் உழைத்து உணவைப் படைத்து உண்பிக்க வேண்டும். ஆக மனிதன் உழைப்பதற்கே படைக்கப்பட்டவன். பிறிதொருவன் வேலை வங்காமல் தானே வேலை செய்பவன்தான் மனிதன். உழைப்பிற்குரிய ஊக்கக் கிளர்ச்சி அவனுக்கே உரியது. ஆனால் உழைப்பென்றால் உள்ளம் சுருங்குபவர் எத்தனையா பேர்! “அத்திட்டத்தில் வாழ முடியாதா? ஆண்டவன் கருணை பாவிக்க மாட்டானா?" என்றெல்லாம் ஏங்குபவர் இன்று எத்தனையோ பேர் திறனறிந்து உழைக்கும் உழைப்புள்ளம் இன்மை ஒரு கேடு. உழைக்காமல் உண்பது பாவத்தில் பாவம். சோம்பித் திரிந்து சுகம் தேடும் கேட்டடினைக் களைவோம். இம்முறையால் பொருளுற்பத்தி பெருகும். சமுதாயம் செழிக்கும்.

விலங்கு தன்னைத்தான் நேசிக்கும். இயற்கை நிர்ப்பந்தத்தால் சில காலம் தான் சன்ற கன்றுகளை நேசிக்கும்.