பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

489



இன்று நம்மை ஆளுவது மனிதர்கள் அல்ல. அரசியல் சட்டமே ஆளுகிறது. நம்முடைய அரசியல் சட்டம் சமயச் சார்பற்ற தன்மையை விவரிக்கிறது. ஆனால் நாட்டை ஆள்பவர்கள் சமயச் சார்பற்ற தன்மையை மறந்து பல ஆண்டுகளாகிவிட்டன ஏன்? நமது நாட்டுக் காவல்துறையினரும் படைவீரர்களும் ராம நாம பஜனையில் ஈடுபட்டுத் தம்மையே மறந்து நின்று, பாபர் மசூதியை இடிப்பதைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள். இராமர் மீதிருந்த பக்தி, பாபர் மசூதிக்கு வேட்டு! இது எப்படி சமயச் சார்பற்ற தன்மையாகும்?

அடுத்து, நமது அரசியல் சட்டம் “ஜனநாயக சோஷலிசக் குடியரசு” என்று பேசுகிறது. இன்று இந்தியாவில் எங்கே சோஷலிசம் இருக்கிறது? நாளும் பணக்காரர்கள் “புனல் நிறைந்த தொட்டிகள் ஆகி” வருகிறார்கள். “பொத்தல் இலைகளைப் போல” மக்கள் ஏழைகள் ஆகிவருகிறார்கள். கருப்புப் பணம் குவிகிறது. அந்தக் கருப்புப் பணம் தேர்தலைப் பணச்சந்தையாக மாற்றி வருகிறது. ஏழைகளுக்குக் கிடைப்பதெல்லாம் ‘ஜீவனாம்சம்’!இலவசம் ! ‘குடியரசு’ என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ‘ஜனநாயகக் குடியரசு’ என்று பிரகடனம் செய்கிறார்கள். ஜனநாயகம் எங்கு இருக்கிறது? ஆளுங்கட்சித் தலைவர், பாராளுமன்றத் தலைவர் என்று இருந்த மரபை மாற்றிவிட்டார்கள்! இன்று ஜனநாயகப் போக்கில் தனி மனிதர் வழிபாடே நடந்து வருகிறது. அரசியல் விருப்பு – வெறுப்புக்கள், கோபங்கள், கட்சித் தாவல்கள் எல்லாம் நடைபெறுகின்றன. இதனால்தான் தலைவர் பெரியார் ஜனநாயகத்தை நம்ப மறுத்தார்: கேலி செய்தார்! நாட்டைக் கெடுக்கும் ஐந்து பேய்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி மக்களை எதிர்க்கும்படி தூண்டினார். அந்த ஐந்து பேய்கள் எவை? கடவுள், மதம், ஜனநாயகம், பத்திரிகை, திரைப்படம் ஆகையவையேயாம்! இவை மக்களிடம் இடம் பெற்றவை. மக்களுக்குத்