பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

503


வனவாக இருக்க வேண்டும். மனித மனங்களைத் தவிர ஏனைய உயிர்களின் உள்ளங்களைப் பிணிக்கும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. குறிப்பாக ஆனாயநாயனாரின் வரலாறு இசை மூலம் மிருக இனத்தையும், பறவையினங்களையும் ஈர்த்திழுத்தமையைக் காட்டி நிற்கிறது. ஆகவே கருத்தைப் பிணிக்கும் கலைகள் நயத்தக்க கருத்துக்களைப் பரவச் செய்யப் பயன்பட வேண்டும்; கலைஞர்களும் தேவை யானவற்றைக் காட்ட வேண்டும் - போதிக்க வேண்டும். மக்கள் விரும்புவதைக் காட்டக் கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதைக் காட்ட வேண்டும்! வாழ்க்கை ஒரு நாடகம். நாம் எல்லாம் நடிகர்கள். நடகர்களிடத்திலே நல்லுணர்ச்சி உண்டென்றால்தான் நாடகம் சிறக்க வழியுண்டு; நல்லுணர்ச்சியோடு நற்சிந்தனையாளரைப் படைக்க வழியுண்டு. நல்லுணர்ச்சியோடு நற்சிந்தனையாளரைப் படைக்க கலைகள் உதவ வேண்டும்.

70. [1]புத்தாண்டுச் சிந்தனைகள்

ஆண்டுகள் உருண்டோடுகின்றன. பழைய ஆண்டு போகிறது; புதிய ஆண்டு வருகிறது. வழக்கம்போல ஆர்வத்துடன் வரவேற்கிறோம்; ஆனால், ஆண்டுகள் வருவதில் போவதில் ஏதாவது தவறுகள் உண்டா என்று தேடிப் பார்த்தால் இல்லையென்றே பதில் வருகிறது!

விடைபெற்றுச் செல்லும் ஆண்டு, ஆங்கீரச ஆண்டு! வரவேற்புப் பெறும் ஆண்டு பூரீமுக ஆண்டு! விடைபெற்றுச் செல்லும் ஆண்டு, நமக்கு மகிழ்ச்சியை தராததோடன்றி, ஆற்றொணாத் துயரத்தையும் தந்துள்ளது. நமது நாட்டில் கொள்ளைகள், கொலைகள் பரவலாகி வளர்ந்துள்ளன. தீவிரவாதம் என்ற பெயரில் பயங்கரவாதம் தலைதூக்கி


  1. மதுரை வானொலி; 13.4.93