பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

526

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொங்கல் திருநாளன்று புது மனிதப் பிறவி எடுப்போமாக! மரங்களை நேசித்து வளர்ப்போமாக! நம்மை ஊட்டி வளர்ப்பதுடன் வளமும் தரும் கால்நடைகளை வளர்ப்போமாக! உணவு வழங்கும் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்போரை மதிப்புடன் நடத்துவோம்! அவர்கள் வாழ்வில் வளம் சேர்க்க முயலுவோம்!

பொங்கல் விழா தமிழ் விழா; தமிழர் விழா! “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்றான் பாரதி தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வோம்! தமிழர் என்று இன ஒருமை நலத்துடன் இனமானம் காப்போம்! எப்பணிக்கும் முதற்பணி தமிழ்ப் பணி! எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்! துறைதோறும் தமிழை வளர்ப்போம்! நமது மூச்சினை பேச்சினை, செயலினைச் செந்தமிழுக்கே அர்ப்பணிப்போம்! உள்ளங்களில் பொங்குக தமிழ்க் கல்வி!

பானைகளில் பால் பொங்குக!

79. [1]பொங்கல் வாழ்த்து

இன்று பொங்கல புதுநாள். தமிழகம் எங்கும் மகிழ்ச்சி பொங்கும் திருநாள். சராசரி வசதியுடையவர்கட, பொங்கல் திருநாளன்று மகிழ்ச்சியோடிருப்பர். எளிமையில் இருக்கும், மகிழ்ச்சி ஆடம்பரத்தில் வருவதில்லை.

பொங்கல் விழா வாழ்க்கையில் நிகழும் அருமையான விழா; எளிமையான விழா, வளமுடையோர், வளமற்றோர் ஒத்த நிலையில் கொண்டாடும் நாட்டுத் திருவிழா பொங்கல்தான்! வறுமையுடையோர் வளமுடையோர் அனைவருக்கும் மண்பானையில்தான் பொங்கல்! பொங்கல் விழாவின் தத்துவம் உயர்வுடையது. பொங்கல்விழா


  1. சிந்தனைச் செல்வம்