பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

51


மொழியையும், நாகரிகத்தையும் இழக்காமல் வாழக்கூடிய உத்திரவாதத்தைக் கொடுத்த சக்தி எது?

காலரா, பிளேக் என்றால் கதிகலங்கிய நாட்டில்-பத்திலும், இருபதிலும் பல்லாயிரவர் செத்த இந்நாட்டில் நோயற்ற வாழ்வைக் கணிசமாக வளர்த்து மனிதனின் சராசரி வயதை 45 ஆக உயர்த்திய சக்தி எது?

ஆசியாவிலேயே வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையைத் தந்து ஆளும் உரிமையுடையவர்களாக்கிய சக்தி எது?

எல்லாவற்றிற்கும் மேலாக, உலக நாடுகள் பலவற்றையும் விட பாரதத்திற்குச் சிறப்பான பாரம்பரியம் ஒன்றுண்டு. அப்பாரம்பரியமானது அன்பிலே பிறந்து, தியாகத்திலே திளைத்து, அமைதியிலே தழைத்து, அருளியல் வழியாகச் சமாதானம் காண்டது. இன்று, உலக வல்லரசுகளிடையே உறவையும் நட்புரிமையையும் வளர்த்துச் சமாதானம் நிலைக்கச்செய்யும் தலைமை எது?

இங்ஙனம் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த நாட்டைப் பல துறைகளில் புதுமையும்-பொதுமையும், வலிவும் வளமும் நிறைந்த நாடாகத் திகழச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும் சக்தியைப் பற்றி மேலும் சொல்லவேண்டிய அவசியமில்லை. நாம் மேலே காட்டியபடி பாரதத்தையும் சிறப்பாக, தமிழகத்தையும் வழி நடத்திச் செல்லும் தலைமையும், சக்தியும் எவை என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? இக்கருத்துக்கள் இன்றைய ஆட்சிப் போக்கைப் பற்றிய உண்மை நிலை.

மற்றொரு சக்தியான இரண்டாவது சக்தியையும் பார்க்க வேண்டும். மேற்சொன்ன முதல் சக்திக்கு ஆக்க ரீதியான கருத்துக்களைத் தருதல், செயல்பட ஆதரித்தல், ஒத்துழைத்தல், தேவைப்படும் இடங்களில் நிர்மாண ரீதியில்