பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

73



மனித வாழ்க்கை மேம்பட முதல் தேவை எது? அன்பா? அறிவா? அன்பு என்றே பதில் கூறுவீர்கள். இல்லை! இல்லை! அறிவே முதல் தேவை. ஏன் அறிவார்ந்த நிலையில் காட்டப்பெற்று வளராத அன்பில் இடைமுறிவு ஏற்படும். விலங்குகளிடத்தில் நிலவும் அன்பைப் பாருங்கள்! பிறப்பில் பரம்பொருள். அமைதியில் மாந்தர் யாவரும் ஒரு குலமே. மனிதன் அறிவியலடிப்படையில் அன்பு காட்டிப் பழகுவானானால் அன்பு தோன்றும்; வளரும்! ஆக, வாழ்க்கையை வாழ்வாங்கு வாழக் கற்றுக்கொடுப்பது அறிவியலே! இத்தகு ஒரு சிறந்த அறிவியலைப் பின்தங்கிய கிராமப்புற மக்களாகிய எங்களுக்கு அறிமுகப்படுத்தி அழைத்துச் செல்கின்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்திற்கும், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகளுக்கும் நன்றி, கடப்பாடு.

மானுடம் சிறக்க மானுட சமுதாயம் தோன்றசிறப்புற இயங்க அறிவியலே அடிப்படை அதனாலேயே திருக்குறள் “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றும், “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்றும் கூறியது. இன்று-நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன அறிவு தேவை? இன்று மனித உலகம் அறிவியல் துறையில் அளப்பரிய சாதனையைச் செய்துள்ளது. அறிவியலும் தொழில் நுட்பமும் பொருளாதாரத்தை வளர்த்து நுகர்வுப் பொருள்களைப் பலவாக்கி, வாழ்க்கை அனுபவங்களை எளிமையாக்கி இன்பத்தையும் சேர்த்துள்ளது. ஆயினும் நாம் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று வினவினால் விடை எதிர்மறையே! ஏன் எதிர்மறைத் தன்மை வாய்ந்த விடை?

பல மனிதர்கள் தங்களுடைய முரண்டு தட்டிப்போன தன்மையை மாற்றிக்கொள்ள முன்வராமையினாலேயே முன்னேற்றம் தடைப்படுகிறது. எங்கு எல்லாம், நிர்வாணத் தன்மை வாய்ந்த சுயநலமும், ஆதிக்க மனப்பான்மையும்