பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


5. கோவிலுர் ஆதினம் திருவருள்
திரு. காசி விசுவநாத சுவாமிகள்
ஞானபீடம் அமர்ந்த 5ஆம் ஆண்டு
விழா வாழ்த்து
28.9.1991

        செந்தமிழ் நிலத்தில் செட்டிநா டென்பது
        அந்தமில் புகழ்சேர் அருமைநன் னாடு!
        செந்தமிழ் மொழியையும் சிவநெறி மாண்பையும்
        சிந்தையால் மொழியால் செயலால் போற்றிடும்
        நாட்டுக் கோட்டை நகரத் தார்களால்
        சிறந்திடும் நாடு, செட்டிநா டாகும்!
        கலைக்கோ யில்களும் கல்விக்கோ யில்களும்
        பலப்பல எடுத்துப் பாங்குடன் புரக்கும்
        நகரத் தார்களின் நற்புகழ் நாவால்
        பகரற் கரிய பான்மைத் தாகும்!
        நகரத் தாரின் நற்குரு பீடமாய்த்
        திகழ்வது கோவிலூர்த் திருஆ தீனம்!
        நாட்டுக் கோட்டை நகரத்தார் மரபில்
        சாற்றற் கரிய தவத்தின் சீலராம்
        முத்து ராமலிங்க ஞான தேசிகர்
        மெய்த்தவ ஞானச் சுடராய்த் தோன்றினார்!
        'ஆண்டவர்' என்னும் அழகிய நாமம்
        பூண்டு, கோவிலூர் பொருந்தி யிருந்தனர்!
        ஆண்டவர், ஆண்டவன் அடிமலர்க் கே, தம்
        நெஞ்சம் வைத்து நெகிழ்ந்துநெக் குருகி
        சீவன் முத்தராய்த் திகழ்ந்த மைந்தனர்!
        நாட்டுக் கோட்டை நகரத் தார்களின்