பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


33. சுமைதாங்கி

"ஒ. மனிதனே!
உன்னைத் தாங்கி நிற்கிறது உன் கால்கள்!
பூமி உன்னையே தாங்கிக் கொண்டிருக்கிறது!
ஏன் தலைகுனிகிறாய்?
தலைகுனிந்து தாழ்ந்து நிற்கும் நிலையில்
முயன்று முடிப்பனவெல்லாம் தெரியாது.
நிலம்நோக்கிக் குனிந்த தலை விண்மீன்களைப் பார்த்தல்
கூடுமா?
துணிவு பெறுக! எழுந்து நின்றிடுக!
துணிவுடன் எழுந்து நடக்கத் தொடங்கியவுடன்
அதிசயம்!
உனது சுமை நீ நினைத்தவாறு கனமாக இன்மையை
உணர்வாய்?
அதோ, பார் அண்டை வீட்டினை!
எத்தனை எத்தனையோ சிக்கல்கள்:
அவனால் வாழமுடிகிறது என்றால் உன்னால்
வாழமுடியாதா?
முடியும்! வாழமுடியும் தேவை, துணிவு!
உனக்கு நீயே கழிவிரக்கப்படாதே!
கழிவிரக்கம் கொள்பவர் எவரும் வாழ்ந்திலர்
துணிவுடன் எழுந்துநில்! அறை கூவல்களை ஏற்றிடுக!
வரும் பொறுப்புக்களைப் பொறுமையாய் ஏற்றிடுக. சுமைதாங்கியென வாழ்ந்து
வையகத்திற்கு உரிமையாகுக!