பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

205


40. சுதந்திரம்!

"சுதந்திரம்” பிறப்புரிமை!
சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா?
காசுகள் கொடுத்து வாங்க, கடைச்சரக்கா?
சுதந்திரம் என்பது மனிதனின் படைப்பு!
இம்மண்ணில் சுதந்திரமாக வாழ்வோரே
உரிமையுடைய மனிதராவர்
சிறைப்படுகிறான்! அவனே சிறப்படைகிறான்
தனக்குரிய சிறைக் கூடத்தைக் கட்டுபவனும் அவனே!
துரதிர்ஷ்டமாகச் சிறைப்படவும் செய்கிறான்!
ஏன்?
அவன் மனச்சாட்சியே சிறையை எழுப்புகிறது!
நிலவறைச் சிறையில் நித்தம் கிடந்துழல்கிறான்!
மனிதனின் மூச்சுக் காற்று, சுதந்திரம்:
அந்தச் சுதந்திரம் மனிதனின் மனச்சாட்சியில் இருக்கிறது!
"மனமே நரகத்தையும் சொர்க்கத்தையும்
படைத்தளிக்கிறது!" என்ற
மகாகவிக் கூற்று ஒர்க!
மனச்சாட்சியை நடு நிலையில் நிறுத்துக!
சார்புகளைக் கடிந்தொதுக்குக!
நல்லனவே எண்ணுக! எண்ணியனவே செய்க!
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஒரேவழி
மனச் சாட்சியின் விடுதலையே!