பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




41. கயமை

வையத்து வாழ்வீர்,
தற்காத்துக் கொள்ளுதல் வாழும் வழிகளில் ஒன்று!
ஆம்! நம்மை நோயினின்றும் சாவினின்றும்
காத்துக் கொள்ளும் பாங்கினைப் போலவே,
கொலையிற் கொடியராகிய கயவரிடத்திலிருந்தும்
காத்துக் கொள்ளல்
விழுமிய வாழ்வுக்குத் துணை!
கயவர் - யார்? எவர்?
இனியன காணார்; நல்லன கூறார்; இழிசொல்லே
சொல்லும் வாயினர்:
பழிச் சொல்லே பலகாலும் கூறிச் சிறுமை துரற்றிடுவர்;
வளரும் புகழினைக் கெடுப்பர்!
தூக்கில் தொங்கும் துன்பத்தினை ஏற்றிடும் அளவுக்கு -
மனங்கொள் அளவுக்குச் சிறுமை செய்வர்!
இனிப்புச் சுவை காட்டிக் கடுந்துன்பம் செய்வித்தலில்
இவருக்கு இணையில்லை!
வாழ்க்கையில் தோல்வியும், நிறைவேறா ஆசைகளும்
அரித்துத் தின்னும் இவர்கள்
மற்றவர்கள் வீழ்ச்சியே தாம் ஏறும் படியெனத் தேறி
வீழ்த்துவர்.
கயவர்க்கு நல்லதில் மகிழ்ச்சி இல்லை.
மற்றவர் துன்புறுதலிலேயே மகிழ்வுகாணும் தூர்த்தர்,
உயர்நிலை சார் மனிதர்களுக்குத் துன்பம் தரும் இக்கயவர், இருபுறமும் கூர்மையுடைய கட்டாரியென
ஒருசேரச் செவிக்கும் இதயத்திற்கும் ஏதம் செய்வர்!
குண நலத்திற் சிறந்தோர் இக்கயவரைக் கண்டிடின்