பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உறுதியும் மரியாதையும் முரண்பாடுடையன அன்று!
உறுதி பேணுக மதிப்புடனும் நடத்துக!
நயத்தொடு பொருந்திய நெறியில் குற்றத்தினை
உணர்த்துக!
பெரும்பாடுறு நிலையிலும் பெருமிதம் பேணுக!
அன்பு காட்டுக! அணைத்து அழைத்துச் செல்க!
உன்சொல் வெற்றி பெறாது போனாலும் கூட
உன் பண்பு பாராட்டப் பெறும்!
நல்ல தலையணையில் தலை வைத்துத் துரங்கிய
சுகம்போல
வாழ்க்கையில் நலந்தரு சுகத்தை அனுபவிப்பாய்!