பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


91. காலத்தின் கட்டாயம்!

என்னுயிரே! என் அறிவே
பொறுமை போற்று!
நீ பொறுமையை இழப்பின்
உன்னை இழக்க நேரிடும்!
உனது கூட்டாண்மை, நம்பிக்கை
மேலும் உத்தரவாதம் வெற்றியைத் தரும்!
பொறுத்தாற்றும் நெறி வெற்றியோடு பொருந்தியது!
பொறுத்தாற்றும் நெறி வெற்றிகளை நல்கும்!
பொறுத்தாற்றும் போக்கு உற்பத்திக்குத் துணைசெய்யும்!
'பட்டுப் பூச்சிகள்' உண்ணும்
மலபரி - தழை பட்டாகக் கூடிய தருணத்தில்
பட்டாதல் போல
பொறுத்தாற்றும் பண்பும்
உரிய காலத்தில் உன் தேவையைப் படைத்தளிக்கும்!
பொறுத்தாற்றும் பண்புக்குப் பலபடிகள் உண்டு!
கடமைகளைச் செய்து, கலங்காது காத்திரு!
வாழ்வெனும் செய்குன்றின் மீது ஏறு!
இயற்கை காத்திருந்து தன் வழியைச் சென்று சேர்கிறது!
மனிதனின் பொறுமை ஆற்றலுக்கு அணி!
பொறுமை!
யார் காலத்தின் கட்டாயத் திற்குக்
கட்டுப்படு கிறார்களோ
அவர்களுக்கே உலகம் உரியது!