பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

285


95. அர்த்தமுள்ள வாழ்வு!

சாவதற்கோ வாழ்வு? இல்லை! இல்லை!
மரணமிலா வாழ்வில் நம்பிக்கை வை!
ஆக்கவழி நோக்கோடு வாழின்
வாழ்க்கையில் பிழைகள் பல ஏற்பட்டாலும்
ஒரு நாளும் வாழ்நாள் வீணாகாது!
ஆயினும், வாழ்க்கைப் பயணத்தில் நாள்கள்
வீணே கழியாமல் பயன்படுத்தப் பெற்றது என்ற
மன நிறைவு பெறலாம்!
வாழ்க்கையின் மாலைப்போது வரும் பொழுது
ஒருநாள், நீ உன் வீட்டின் அருகில்
இன்று உன்னுடைய நாள்! பயன்படுத்துக!
இந்த நாள் நன்றாகவோ, தீயதாகவோ
கழிந்த பின்
இரவில் தங்கு! நாட்காலையில் எழு!
எண்ணச் சுமைகளுடன் பயணத்தைத் தொடங்கு!
நகர்! நட! விரைந்துநட! ஒடுக!
நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும்
நடைபெறும் பயணத்தில்
இலக்கை அடைவது உறுதி! என்றும் இழப்பில்லை!
பயணத்தின் வசதிகள் அவசியமே!
ஆயினும் பயணவழி முக்கியம்!
நம்பிக்கை - தன்னம்பிக்கை
வாழ்க்கைப் பயணத்தை உறுதி செய்தல் போல
நம்பிக்கை நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது
அர்த்தமுள்ள வாழ்க்கைக்குச் சாவு இல்லை!
என்றும் வாழலாம்! என்றும் வாழலாம்!

கு. XIV. 18.