பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


124. ஏசுவின் மொழி!

மதம் கட்டை விரவில் ஏற்பட்ட புண் போன்றது!
எப்போதும் அவர்கள் தம்முடைய மதநெறியிலேயே
நடப்பர்!
அதாவது, மனிதராய் இல்லாமல் மதம் கூறும் வழியே
நடப்பர்!
சிலர், மனித குலத்தோடு ஒத்ததறிந்து
பழகும் பாங்கியலை மாற்றிக் கொள்வர்!
மாற்றம், பச்சோந்தித் தன்மையதல்ல வளர்ச்சியைக்
குறிக்கோளாக உடையது.
சிலர், மனிதகுலத்தின் உறவு கருதி மதத்தையே
விட்டு விடுவர்!
பலர், ஒன்றோடொன்று ஒவ்வாத
மனிதம் - மதம் இவற்றிடைக் கிடந்து புழுங்குவர்
இதன் விளைவு, எதிர் விளைவு!
கடவுளுக்கு நன்றி கூறி விடைபெறுதல்
மாந்தர் வாழும் வீதிக்குச் செல்லுதல்!
ஒருபோதும் மனிதகுலத்தோடு பொருந்திவராத மதத்தினை
அரைகுறையாகத் தழுவி நிற்றலிலும் ஒருசேரக்
கைவிடுதலே நன்று!
வாழ்க்கையில் அவலமா?
உன் வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒழுங்கில்லாமல்
வலவரின் கட்டுப்பாடின்றிச் செல்லும் ஊர்திபோல்
நிகழ்கின்றனவா?
அஞ்சற்க! இருவழி தீது என்று உணர்க!
ஒரே வழி தேர்வு செய்க!
உள்ளார்ந்த அன்பளிப்புணர்வே.
இருவேறு மனமாகத் திரியும் மனத்தைத் திருத்தி
ஒருபாதையில் நடக்கச் செய்யும்!