பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

23



2. திருவள்ளுவர் ஈராயிரம்
ஆண்டுவிழாக் கவியரங்கம்
சென்னை-திருவள்ளுவர் மன்றம்
2-3-69-இல் நிகழ்த்திய
திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுவிழாக் கவியரங்கம்
தலைமைக் கவிதை


மண்திணி ஞாலம் அதனில் மானுடம்
தோன்றிய தொன்மையை யாரே அறிவார்?
அளப்பிலா அண்டம் அனைத்திலும் இயங்கும்
உயிர்களி லெல்லாம் உயர்ந்தது மானுடம்!
ஆளப் பிறந்தது; அறிவின்மேம் பட்டது.
அந்த மானுடச் சாதியிங் கோங்கியே
மாண்புறு நலமெலாம் மண்டிச் செழித்திடத்
தெரிந்து தெளிந்து வழியுரைத் தோர்பலர்
அவருள்,
வான்புகழ் வள்ளுவன் வடித்துக்காட் டியவழி
தேரா உலகில் தெளிந்த தனிவழி!
காரிருள் கடிந்தெழுஞ் செழுங்கதிர்ப் பொன்னொளி!
துன்னும் மனத்திருள் கடிந்தெழு ஞாயிறு
வள்ளுவன் தந்த வான்மறை யதுவே!
வள்ளுவன் தந்த தெள்ளிய குறள்நெறி
குறுகிய நெறிகளைக் கடந்த பெருநெறி
தரணியிற் சிறந்த தமிழினத் தனி மறை!
பொதுமை நலங்கனி பொதுமறை! நவமணிக்
கற்களால் ஆய கவின்மா ளிகைபோல்
சொற்களால் ஆய துரமணி மாளிகை!
அணி சிறந் திணிக்கும் சிந்தனைத் தேன் துளி.
சிந்தனைத் திறனால் சீர்பெறு வாழ்க்கை