பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பாரதி நெட்டை மரமென நின்ற
கோழையர் தம்மை வீர ராக்கினான்.
அன்னான் விளைத்த வீரமஃ தன்றோ
விடுதலை விளைத்தது! பாரதி நெஞ்சால்
தமிழன்! தமிழை நினைந்து நினைந்து
மகிழ்ந்தான். ஆயினும் கங்கை யாற்றையும்
காவிரி யாற்றையும் இணைத்துக் காட்டினான்!
பாரதிக் குயிர்தமிழ் உடல்பா ரதமாம்!
பார திக்குப் பாரதம் கோயில்;
ஆங்கே ஆர்ந்திடும் தெய்வம் தமிழாம்!
அவன் உல குக்கு எல்லை ஒன் றில்லை!
எல்லைக்குள் சிக்கிய தெதுவா னாலும்
துன்பமே! கவிஞன் பாரதி உலக
எல்லை களை உடைத் தெறிந்து ஓர்உலகம்
கண்டான்! கவிஞர்காள், பாரதி வழியில்
பாடுங்கள்! ஒருலகம் காணப் பாடுங்கள்!
பொதுநெறி பாடுங்கள்! புத்துலகம் காணுங்கள்!
ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்
உலகின் பக்கேணி என்ற கனவை
நினைவாக்கக் கவிஞர்களே பாடுங்கள்!