பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



168. பிறரைப் புகழ்

புகழ்ந்து பேசு! புகழ்ந்து பேசு!
எல்லா உயிரினங்களும் விரும்புவது புகழே!
புகழ்வது உதவியாக அமையும்!
புகழ்வது கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பெறும்!
புகழ்வது வேறு! முகத்துதிவேறு!
ஒவ்வொருவரிடமும் புகழ்தலுக்குரிய
தகுதிகள் சில இருக்கும்!
புகழ்தலுக்குரிய அத்தகுதியைக் கண்டுபிடி!
அதைப் புகழ்ந்து பேசு!
புகழ்ந்து பாராட்டும் சொற்கள் எல்லாம்
புதிய தீர்மானங்களைச் செய்யும்
சில மனிதரை நீ விரும்பும் சில காரணங்களால்
புகழ்கின்றாய்!
இழிந்தவைகளைப் பேசுவோராயினும் கவலைப்படாமல்
அவரிடம் உள்ள ஏதோ
தகுதி ஒன்றினைப் பாராட்டு! உற்சாக மூட்டு
பயன் கிடைக்கும்!
ஒரு மனிதன் ஏதாவது ஒன்றில்
சிறந்து விளங்குகின்றானா?
அதைப் பாராட்டு! புகழ்ந்து பேசு;
அவன் வளர்வான்; மீண்டும் புகழ்ந்து பேசு!
அவன் மிகவும் வளர்ந்து வருவான்!
மீண்டும் புகழ்ந்து பேசு!
அந்தப் புகழ்ச்சி அவனுக்கு உதவியாக இருக்கும்
உனக்கும் உதவியாக இருக்கும்
புகழ்ந்து வாழ்தல் நல்லவாழ்வு!
எதிர்மறை வேண்டாம்!
பாராட்டுக! புகழ்க!