பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



170. எது செய்தது?

எங்கும் நன்மை கூடுதலாகவே காணப்படுகிறது!
எல்லா உயிர்க்கும்
நல்ல தோற்றம் ஒரு சொத்து!
ஆனால், அதுவே உயர்மதிப்புடையதல்ல!
மனிதன் -
நல்ல தோற்றமுள்ள மனிதன்
கட்டான உடல் தோற்றமுள்ள மனிதன்
இவனுக்கு நல்வாய்ப்புண்டு!
ஆனால், வாழ்க்கையை வென்று விளங்க
மகிழ்ச்சி ததும்பும் பழக்கங்களும்
தங்கம் நிகர் ஒழுக்கங்களும்
கூர்த்தமதியும் தேவை!
நல்ல தோற்றம் பேசப்படும்!
ஆனால், வெற்றி கிடைக்காது!
நெடிய பயனுமிருக்காது!
அகத்தூய்மை ஆண்டுகள் பலவானாலும் வெற்றி பெறும்!
பிறப்பிலேயே அழகாகப் பிறந்தவர்கள் உண்டு!
ஆனால், பிறப்பிலேயே வென்றவர்கள் இல்லை.
சிலபல ஆசைகள் மனிதனை உருவாக்கா!
அவனைச்
சந்தைக்கு அனுப்பலாம்!