பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"மூல தனம்” கண் டான்மூ தறிவால்
மார்க்ஸின் "மூல தனத்தை” விரித்து
வளர்த்தான் வான்புகழ் லெனின்வை யகத்தே!
"மூல தன” நூல் தனக்குப் பதவுரை
பொழிப்புரை கண்டா னில்லை. பாரினில்
செழிக்கத் திட்டம் தீட்டி, வறுமை
அற்ற உலகைப் படைத்தளித் தான், லெனின்!
ஒப்பில் லாதோர் சாதனை யாகும்.
இருநூற் றாண்டின் முன்பு தோன்றிய
மார்க்ஸ் சொன்ன சொல் செயலா வானேன்?
இருபது நூற்றாண்டுகளின் முன்பே
எடுத்துரைத் தான் நம் வள்ளுவன்! ஆனால்,
நடந்தது என்ன? சொல்லுக் குச்சொல்
உணர்வினை மூடி மறைக்கும் வெற்றுரை
படைத்த தன்றிப் பயனொன் றும்இலை
செயல்பட சிந்தை செலுத்தி னோமா?
நாயனா ராக்கி நற்சிலை யமைத்து
வெந்த சுண்டலைத் தின்று விட்டு
விதியென் றிருந்தோ மேஅல் லாது
தீவினை மாய்த்த வழியொன் றில்லை!
வள்ளுவன். புகழ்க்கு மாசு தேடினோம்!
பொய்யா மொழியைப் பொய்ம் மொழி யாக்கினோம்
"தம்மின் தம்மக் கள்அறி வுடைமை
இனி" தெனச் சொன்னான். நாமோ ஆக்கப்
பணியொன் றின்றி அறிவினை இழந்து
பீடும் இழந்தோம்; வாடிக் கிடக்கிறோம்!
விண்ணக மதனில் திரிதரும் வள்ளுவன்
கண்ணிலே செந்நீர் உகுத்தங் கிருந்தே
"எமது அருமைத் தமிழக மக்காள்,
போதும், போதும்.வெறும்வழி,பாடு!