பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



2. வாழத் தெரியுமா?

சீராப்பூர் ஒரு சிற்றுார் - கிராமம். இந்தக் கிராமத்தில் இராமன் - இலக்குமணன் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்தனர். இராமன் அண்ணன், இலக்குமணன் தம்பி. பிறப்பிலும் பெயரிலும் தான் இராமன், இலக்குமணன். ஒருவருக்கொருவர் நல்ல உறவு இல்லை.

இலக்குமணன் ஜோசியம், குறி, பார்ப்பதிலும் அவற்றை அப்படியே நம்பும் பழக்கமும் உடையவன். எதற் கெடுத்தாலும் நாள் பார்ப்பான். இலக்குமணனுக்கு நாள் பார்ப்பதற்குத்தான் நேரம் இருந்தது. வேலை செய்ய நேரம் இல்லை. பணம் சம்பாதிக்க நேரம் இல்லை. "பல நாள்கள் நல்ல நாள்கள் இல்லை. எது செய்தாலும் கை கூடி வராது” என்ற நம்பிக்கையில் வேலை செய்யாமலே கழிந்தன. பணம் சம்பாதிக்கவில்லை. விளைவு சோம்பல்! இடையில் வந்த ஒன்றிரண்டு நாள்களும் கூடப் பழக்க வாசனையில் சோம்பலில் கழிந்தன. வந்தது வறுமை!

அண்ணன் இராமன் கூப்பிட்டு ஆள் அனுப்பினார்அறவுரை கூற வேலையில் ஈடுபடுத்த உதவி செய்ய! இலக்குமணனோ தற்பெருமை கருதி அண்ணன் அழைத்தும் போகவில்லை. அண்ணன் நேரில் வந்தான். அப்போதும் அண்ணனை, போலியான தன் மதிப்பின் காரணமாக மதிக்கவில்லை. அண்ணன் சொல்லைக் கேட்க விரும்பவில்லை. என்னாயிற்று! இலக்குமணன் வாழ்க்கை கெட்டது.

நாள் பார்த்தே வாழ்க்கையின் பெரும் பொழுதைக் கழித்ததன் பயன் பொருளாக வேண்டிய பொழுதெல்லாம் பதராகப் போயின. சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய வாழ்க்கை சோம்பலுக்கு இரையாயிற்று! உடன் பிறந்தோனிடம் தேவையில்லாத டோலி மான