பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சியைக் கைக் கொண்டதால் அண்ணன் உறவு தெட்டது. தங்கத்திலும் மேலாய அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. உதவியையும் இழக்க நேர்ந்தது. இலக்குமணன் குடும்பம் நலிந்தது! துன்பத்தில் ஆழ்ந்தது!

இலக்குமணனுக்கு ஏற்பட்டது போல நமக்கு வரக் கூடாது. அப்படியானால் நல்ல நாள், கெட்ட நாளாயிற்று! பொழுதை வீணாக்கக் கூடாது! வாழ்வோருக்கு எல்லா நாள்களும் நல்ல நாள்களே! ஒரு நொடிப் பொழுதும் சோம்பல் கூடாது! வேலை! வேலை! என்று ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். உற்றார் - உறவினரிடத்தில், அயலாரிடத்தில் தற்பெருமை பாராட்டக் கூடாது. மானம் அவமானம் பார்க்காமல் பழக வேண்டும். இங்ங்னம் வாழக் கற்றுக் கொண்டால் வாழலாம்! வளமுடன் வாழலாம்!

"குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்” குறள் - 1028