பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதைகள்

455


போயிட்டியேன்னுதான் கவலை! சரி போய் தோப்பிலே உள்ள வேலையைப் பாரு'

"சரி எஜமான்' என்று சொல்லி வீழ்ந்து வணங்கினாள்.

"ஐயா!”

"வேலைதான் கொடுத்தாச்சு! அப்புறம் என்ன ஐயா! ஐயா! என்ன யோசிக்கிறாய் சொல்லு:

"பொங்கல் வருதுங்க! கையிலே ஒரு நயா பைசாகூட இல்லீங்க!”

"அப்படினா?”.

"கொஞ்சம் முன் பணமாக கொடுங்க!"சம்பளத்தில். கழிச்சுக்கங்க!”

"எவ்வளவு வேணும்?”

"ஐந்நூறு ரூபாயும் ஒரு முட்டை நெல்லும் கொடுங்கய்யா !”

'போதுமா? உன் அக்கா தங்கச்சிக்குச் சீர் கொடுக்கணுங்கிறே! நம்ம கரும்புத் தோட்டத்திலே பத்துக் கரும்பு வெட்டி எடுத்துக்க! தேங்காய் பத்து பறிச்சுக்கோ! இந்த ரூபாய் ஐந்நூறு! இது முன்பணம் அல்ல. இனாமா வைச்சுக்கோ! நீ நல்லவனாக மீண்டு வந்ததே பெரிய ஆஸ்தி கிடச்சதுபோல!"

ராமு நெல் மூட்டையுடனும் கரும்பு, தேங்காய் களுடனும் வீட்டுக்கு வந்து சேர்கிறான். பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. நம் பிள்ளையா என்று ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். ராமு நெல் மூட்டையை இறக்கி வைத்துவிட்டு ரூ. 500 எடுத்து தகப்பன் காலில் வைத்து வீழ்ந்து வணங்குகிறான்.

"அப்பா! மன்னித்துவிடுங்கள்! இனி நான் புதிய ராமு! புதுப் பிறப்பெடுத்து நிற்கிறேன்! நாளை போகி அல்லவா? கெட்ட பழக்கங்களப் போக்கிவிட்டேன்! பஞ்சாட்சர