பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



முடிப்பு:

சத்தியைச் சரணம் அடைந்த சத்தி
சரணன் தூய சத்தியே இனிய
நன்மகன் தன்னை நல்கிடு மென்றே
பொன்கவி பொழிந்தார் நம்செவி குளிர!
ஒருநொடிப் பொழுதிலிங் குள்ளம் தெளிந்தீர்,
மனைக்குச் சென்றதும் மாலைப் பொழுதில்
இந்தநல் உணர்வு ஓங்கிடில் இனிதே
நாடும் நாமும் நனிசிறந் திடுவோம்!


5. கவிஞர் மா. கண்ணப்பன்


அறிமுகம்:


இயல்பில் எல்லாரும் பெரிய ரல்லர்.
பெரிதும் முயன்றே பெரியோ ராயினர்.
முன்னே மூத்தும் பெரியோ ரானவர்
கேண்மை யைக்கொளக் கிளர்ந்து செயற்படல்
பெரியோ ராகும் பெருநெறி யாகும்.
நம்மில் பெரியவர் யாருளர்? ஊரார்
தத்தம் மனத்தன ஆயிரம் ஆயிரம்
பேசி ஏசினும் பெரும் பொருள் பதவி
பெற்றவ ரெல்லாம் பெரியவர் இன்றே!
கல்தோன்றி மண்தோன் றாக்கா லத்தே
முன்தோன்றி மூத்த குடியினில் சதியால்
சாதிகள் வகுத்துத் தமிழினம் தன்னை
இழிந்த சாதியாய் இழுத்துத் தள்ளிச்
சதுரா டியஒரு சழக்கினைச் சாடித்
தமிழன் தலைநிமிர்ந் திடவே செய்த
தந்தை பெரியார் பெரியா ரேதான்!
பெரியார், பெட்புறு திட்டம் அமைத்துப்