பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


          நாடி நரம்புகள் கொண்ட உருவம்
          அன்பின் உருவம தாக மாறியே
          விழிகளைத் தந்தஅவ் விழுமியோன் பெயரை
          நானிலம் நாடொறும் நினைந்து உயர்ந்திட
          என்றே இப்பெயர் எடுத்தகண் ணப்பன்
          தங்கத் தமிழில் தாலாட்டுத் தமிழில்
          பெரியோன் பெருமை வரிசைகாட் டுவரே?

முடிப்பு:

          கவிபா டுவதில் சிறந்தகண் ணப்பன்
          கனிவுறக் காட்டிய பெரியோன் கண்டோம்!
          பேருல கதனில் அவரைத் தேடிப்
          பிடிப்பது எங்கே? பெரிதும் முயலுவோம்.

6. கவிஞர் வள்ளியப்பன்

அறிமுகம்:

          திரிதரு ஞாலம் தலைகீழ்ப் படாது
          நின்றே இலங்கும் நெறிக்குக் காரணம்
          சீலத்திற் சிறந்த சால்பே யாகும்.
          குறைநிறை ஓரா மல்குன் றனைய
          மனிதர் நாளும் இனியவே புரிவர்
          இவர்மா மழையினும் ஏத்துதற் குரியோர்?
          இவரே தெய்வத்தில் தெய்வமு மாவார்
          திண்நிலம் தாங்கும் சீரியோ ராவார்
          நலமே ஆற்றிட நானிலம் வந்தவர்
          ஏன்பிறந் தோம்என எண்ணுத லின்றி
          வலிய வம்புகள் பலப்பல செய்வர்.
          சார்ந்தவர் தம்மைச் சாகடித் தன்றோ
          மகிழ்ந்திடு கின்றனர்; வாழ்ந்திடு கின்றனர்;

;