பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


5. கவிஞர் புதுவை சிவம்

நம்பெரி யார்க்கும் நமக்கும் இனிய
உறவுண் டாயினும் முரணும் உண்டு.
குறைவிலா நிறைவாய்க் கோதிலா அமுதாய்
இனியநற் பண்பு திணிஉறை விடமாய்
உள்ளது எதுவோ அதுசிவம் என்பது
நமது கருத்து! ஆயினும் ஐயா
பெரியார் அதனை யேற்றிட மாட்டார்!
இங்கொரு புதுவை சிவம்வரு கின்றார்
சிவமெனும் பெயரைச் செவிமடுத் திட்டால்
பெரியார் சும்மா பேசா திருப்பரோ?
நமக்கொரு துணையாய்ச் சிவமெனும் பெயர்கொண்
டிங்குவந் துற்ற எழிற்றமிழ்க் கவிஞ!
சிவம்எந் நாட்டார்க் கும்பொது என்றார்
பொன்னு லகம்புகழ் மணிவா சகனார்.
அதனைப் புதுவைக் குரிய தாக்கினரீர்!
சிவமும் சீரல் லாதன வற்றைச்
சீராக் குவதே! அதுபோல் பெரியார்
எதையும் அழிப்பவ ரல்லர்! தீயன
அழித்து நல்லன ஆக்கிச் சீரினைப்
பெருக்கும் சிவமே நம்சிவ மாகும்!
ஒருவகை யிற்சிவத் தின்தொழி லோடு
பெரியார் தொழிலும் ஒத்திடல் கூடுமோ?
புதுவை சிவமலர் புதுவைத் தமிழில்
சீருற வே“சீர் திருத்தச் சிற்பி”யைக்
காட்டிப் பாடுவார் கவினுற இங்கே!

6. கவிஞர் ச. பாலசுந்தரம்


பால சுந்தரம் பாவில் வல்லவர்;
சந்தமுத் தமிழின் சதுரப் பாட்டினால்
புவியெலாம் புகழ்த்திரு கொண்டு பொலிந்திடும்