பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


5. இராமநாதபுரம் பொங்கல்விழாக்
கவியரங்கம்


இராமநாதபுரம் 11-1-1986

பொங்கல் கவியரங்கம்
தலைமைக் கவிதை


பொருள்: “பொங்கல் சிறக்கவே!”

        ஞாலத் துயர்ந்த நற்றமிழ் நிலத்தை
        ஆண்ட அரசர் பற்பலர்! அவருள்
        சேது காவலர் செந்தமிழ்ப் புரவலர்;
        அருள்நெறி வளர்க்கும் பெருந்தகை யாளர்!
        எனவிளங் கியவர்கள் இராம நாதபுரம்
        மன்னர்கள்! அவர்கள்தம் மாட்சிமை பெரிது!
        இமைப்பொழு தும்எம் நெஞ்சினில் நீங்கா
        எமையாள் கின்ற ஈசன் ஊர்என
        உவந்து குடிகொண்(டு) எழுந்தருள் செய்யும்
        உத்தர கோச மங்கை யெனும்பதி
        உளதாம் பெருமை உடைய(து) இந் நிலமே!
        மூடத் தனத்தின் முடைநாற் றத்தினைப்
        போக்கவும், நம்மதம் புதுமைபெற் றிடவும்
        தாமே உயர்ந்தவர் எனும் தருக் குடைய
        மேலைநாட் டவரெலாம் வியக்கவும் இந்திய
        ஆன்மிக வளத்தை அள்ளி வழங்கிய
        விவேகா னந்தரை வியனுல(கு) அறியச்
        செய்த உத்தம அரசும் நம் அரசே!
        இந்தப் புண்ணிய பூமியில் [1]ராஜீவ்
        வாலியா ஆட்சிப் பொறுப்பினை வகிப்பது


  1. *இராமநாதபுர மாவட்ட ஆட்சியர்.