பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இஃதே அண்ணா கொள்கையு மாகும்.
கவிஞர் சவகர் அண்ணா வழியில்
அரசியல் இதுவென அமைத்துக் காட்டுவார்!
அறிஞர்அண் ணாவின் பாராளு மன்ற
அரசியல் வாழ்வில் அமரர் நேரு
பெருமான் பங்கேற் றிருந்தார்! நேருவின்
மறைவின் போது அண்ணா வைவிட
அழுதவர் வேறுயார்? ஆதலால் சவகர்
அண்ணா அரசியல் இதுவெனக் காட்டுதல்
பொருத்தமே! வருக! கவிதை பொழிகவே!

முடிப்பு:

சவகரின் கவிதையைக் கேட்டோம்! அண்ணா
மக்க ளாட்சியின் காவலர் என்றும்
ஆதிக்கத்தின் தடுப்புச் சுவர் என்றும்
தன்னாட்சி உரிமையின் குரல் என்றும்
நாடும் அறியும்; நாமும் அறிந்தனம்!
வாழ்ந்த நம் இனத்தின் வரலா றதனைப்
புதுப்பிப் பதுவே அண்ணா அரசியல்!
ஏழைமை யகற்றி எல்லா ருக்கும்
வாழ்வளிப் பதுவே அண்ணா அரசியல்!
அண்ணா கண்ட அரசி யல்வழி
இஃதெனத் தெளிந்தோம்! அவர்வழி நடக்கும்
துணிவினைப் பெறுவோம்! தொடர்வோம் பணியினை!

கவிச்சுடர். கவிதைப் பித்தன் - அறிமுகம்


கவிச்சுடர் ...! கவிதைப் பித்தன்!
வியப்பா ன, பெயர்! ஐயா கவிஞரே!
நீர்,
கவிதைப் பித்த னாகிட வேண்டாம்!